ஆங்கிலேயர் காலத்திலேயே வட கிழக்குமாநிலமான அஸ்ஸாம் ரயில்வே வசதியை பெற்று விட்டது. ஆனால் சுதந்திரம்அடைந்து சுமார் 60 ஆண்டுகள் கடந்த பிறகும் அருகிலுள்ள வட கிழக்கு மாநிலங்களில் மக்கள ரயிலையே பார்க்காமல் இருந்தார்கள்.மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் மேகாலாயாவில் முதன் முதலில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது. அடுத்து மிசோரம் ரயிலை பார்த்தது .இப்பொழுது மணி ப்பூரில் ரயில் பயணம் ஆரம்பமாகிறது.வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் த விர ஏனைய மாநிலங்களில் ரயில் மற்றும் விமானப்போக்கு வரத்து வசதிகளை உருவாக்காமல் 60 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.
கடந்த 60 ஆண்டு காலமாக இந்தியாவில் பல சிறிய மாநிலங்களில் ரயில் சேவை கொண்டுவரப்படவில்லை இந்த நிலையில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றுவதில் கடுமையாக பணியாற்றி வருகிறது இதனால் அங்கு நக்சலைட்டுகள் குறைந்து வருகிறார். இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள் அமைத்து பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அசாம் மாநிலத்தின் சில்சார் ரயில் நிலையத்திலிருந்து மணிப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைன்கைசுன்பாவோ ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் கடந்த வாரம் சோதனை முறையில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று அசாம் மாநிலத்தின் சில்சார் ரயில் நிலையத்திலிருந்து மணிப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைன்கைசுன்பாவோ ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் கடந்த வாரம் சோதனை முறையில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம் 11 கிலோ மீட்டர். புதிய ரயிலை அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
இதுகுறித்து வட கிழக்கு ரயில்வே மண்டல மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி நிரிபென் பட்டாச்சார்யா கூறும்போது, “தற்போது அசாமிலிருந்து, வைன்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை அகல ரயில் பாதை போடப்பட்டு பயணிகள் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயணிகள் ரயில் இந்த தடத்தில் அறிமுகம் செய்யப்படும்” என்றார்.
மேலும் மணிப்பூர் முதல்வர்என்.பிரேன் சிங் தனது ட்விட்டரில் பக்கத்தில் “இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் மாநில மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்” என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















