நேற்றைய தினம் நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறந்தது. ஜம்மு காஷ்மீரிலும் பட்டொளி வீசி பறந்தது.கடந்த 2014 மே 26-ம் தேதி பாரத நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் தீர்க்கவே முடியாது என்று சொல்லப்பட்ட பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகத்தான சாதனை படைத்து வருகிறார். அதில் மிக முக்கியமானது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது.
நேற்று கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தில் தினத்தில் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த 2016 ம் ஆண்டு, காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தை முஷாபர் வானி, புல்வாமா மாவட்டம் டிராலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும். தேசியக்கொடி ஏற்றிய வீடியோ, புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, முஷாபர் வானி , தான் பணியாற்றும் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















