டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் பெண்கள் பாதுகாப்புக்காகப் பல சட்டங்களையும், சட்ட மாறுதல்களையும், திட்டங்கள் உருவாக்கத்தையும் இந்த சம்பவம் உண்டாக்கியது. டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் தூக்கிலிடப்பட்டான்கள்
இதேபோல் கொடுமை சம்பவம் வேலூரில் தற்போது நடந்துள்ளது. நண்பருடன் படம் பார்க்கச் சென்ற தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் சாலையில் உள்ளதிரையரங்கில்வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர். படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இது சேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர். காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றின் கரைக்கு சென்றது.
இதனால் பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டத் தொடங்கினர். பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர். மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.
நன்றி : நியூஸ் 18 தமிழ்நாடு
Get real time update about this post categories directly on your device, subscribe now.















