நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது. வரிகட்டுவது என்பது கட்டாயக் கடமை. அது ஒன்றும் நன்கொடை கொடுப்பது போன்று அல்ல என்று நடிகர் விஜய்யை கண்டித்து அவருக்கு நீதிமன்றம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த அபூர்வ மனிதர் அவர் அவரைப் போய் வரிக்கட்டச் சொன்னால் எப்படி சார்.
நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததே தவறான முன்னுதாரணம் ஆகும் என்பதை நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் தனது தீர்ப்பில் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். மேலும் ரோல்ஸ் காருக்கான நுழைவு வரியை முறையாக செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியதோடு அல்லாமல், அபராதமாக நடிகர் விஜய் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அந்த தொகையை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்தியிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.
இந்தமாதிரி நடிகர்கள் தான் சைக்கிள் களில் வந்து ஊரை ஏமாற்றுபவர்கள். தவறு யாரும் செய்தாலும் தவறுதான். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதற்கேற்ப சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் எஸ்.எம். சுப்ரமணியம் வலுவாக நிரூபித்து இருக்கிறார். அவர் நேர்மையான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.
கூடவே ஒரு நாள் சிறைத்தண்டனை வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சில சினிமா நடிகர் என்னவோ மகாத்மா போன்று அவ்வப்பொழுது கருத்துக்கள் வெளியிடுவதும் ஆனால் இவர்கள்தான் வரிஏய்ப்பு செய்வதில் முதன்மையாக உள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















