1971 டிசம்பர் 16 வரை பாரதத்துக்கு…. அதன் இந்துக்களுக்கு ஒரே ஒரு எதிரி இருந்தது. அதன் பெயர் பாகிஸ்தான்.
அது (மேற்கு) பாகிஸ்தான் – கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்) என்று தனக்குள் அடித்துக் கொண்டிருந்தது. “உருது பேசும் நானே உயர்ந்த பாய், வங்காள மொழி பேசும் நீ தாழ்ந்த பாய்” என்று தன் ஆதிக்கத்தை, அதிகாரத்தை வங்காள மொழி பேசிய கிழக்கு பாகிஸ்தானியர் மீது காட்டியது (மே) பாகிஸ்தான். லட்சக்கணக்கான கிழக்கு பாகிஸ்தானியரை கொன்று குவித்தது மே பாகிஸ்தான். லட்சக்கணக்கானபெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது….
கலவரம் மூண்டது இரு பிரிவுகளுக்கும் இடையே.
மைமுனா பேகம், “பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுகிறேன்” என்று கூறி, இந்த பிரச்சினையில் ஆஜராகி, கிழக்கு பாகிஸ்தானிலிருந்த மே பாகிஸ்தான் இராணுவத்தை அடித்து உதைத்தது.
ஜெனரல் ஏ ஏ கே நியாஸி தலைமையில் இயங்கிய 93 ஆயிரம் மே பாகிஸ்தானிய இராணுவத்தினர், பாரதத்திடம் சரணடைந்தனர். (இப்போதைய பாகிஸ்தான் பிரதமர் முழுப்பெயர் இம்ரான் கான் நியாஸி. அடிவாங்கி, சரணடைந்த வம்சம்).
கிழக்கு பாகிஸ்தான் தன்னை ‘வங்காளதேசம்’ என்று தனி நாடாக அறிவித்துக் கொண்டது.
“1947இல் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். எல்லைகளை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று பாகிஸ்தானை பணிய வைத்த பின் பிடித்து வைத்த 93 ஆயிரம் இராணுவத்தினரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து பிரச்சினையை தீர்க்காமல், எந்த நிபந்தனையுமில்லாமல் அந்த 93 ஆயிரம் பேரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது மைமுனா அரசு.
அதே சமயத்தில் பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்களை கொடுமைப்படுத்தி கொன்றது பாகிஸ்தான்.
மேற்கு – கிழக்கு பிரச்சினையில் இருந்த எதிரியின் பிரச்சினையில் மைமுனா நுழைந்ததை, “Leadership skill. ராஜதந்திர செயல்” என்று பெருமைப்படும் காங்கிரஸ் அடிமைகள், “தங்கள் பிரச்சினையில் பிசியாக இருந்தவர்களை அவர்கள் பிரச்சினையை இந்தியா தீர்த்ததால், இன்று பாரதத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், வங்காளதேச பயங்கரவாதிகளும் தாக்க காரணமானது. இரண்டு எதிரிகளை சம்பாதிக்க காரணமானது” என்பதை மூடி மறைப்பார்கள்!
அரசியல் ரீதியில் பார்த்தால் இது இந்தியாவுக்கு தேவையில்லாத வேலை. ஆனால் இராணுவத்தின் படி பார்த்தால், “நாங்கள் களத்தில் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்பதை நிரூபிக்க நாள்!
மைமுனாவுக்கு கண்டனங்கள். இராணுவத்துக்கு பாராட்டுகள். விஜய் திவஸ்!!
குறிப்பு: தகப்பன் பூட்டோ இந்தியாவிடம் தோற்றாலும், மகள் பெனசிர் பூட்டோ காஷ்மிர் பண்டிட்டுகளை கொன்று தன் ஆசையை தீர்த்துக்கொண்டாள் என்பது வேறு கதை
VijayDiwas #VijayDiwas2020 #VijayDivas
Get real time update about this post categories directly on your device, subscribe now.















