அமெரிக்க அதிபர் மோடி சந்திப்பின் போது பா.ஜ.க எப்படி கலவரம் செய்வார்கள் ! ராஜேந்திர பாலாஜி நச்

தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் நாளை நடைபெறும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பலன் சாமி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஏற்படுகளை ஆய்வு செய்து விட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர் சந்தித்த பேசினார்.

அவர் பேசியதாவது : மதக்கலவரங்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார் சும்மா இருந்த சங்கை ஊதிக் எடுத்ததுபோல என்று பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகிறார். எனவும் ,ஓடி ஓடி ஆட்டோவில் சென்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் வேறு ஏதாவது ஒரு மத பிரச்சனையோ அல்ல சமூக பிரச்சனைக்கு இதுபோல கையெழுத்து வாங்கி இருப்பாரா? இஸ்லாமிய மக்களை எப்போதும் பயத்தில் வைத்திருக்க வேண்டும் அதுதான் மு க ஸ்டாலினுக்கு தேவை.

அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார், பா.ஜ.க வின் ஆட்சி நடக்கிறது, நரேந்திர மோடி அதிபரை வரவேற்று இந்திய வல்லமை பெற்ற நாடு என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்,அந்த நேரத்தில் பாஜகவினர் கலவரத்தை இழுக்க காரணமாக இருப்பார்களா?

எங்க கலவரம் நடந்தாலும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம், சங்பரிவார் தான் காரணம் ஏற்புடையதல்ல என தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் உண்மை தன்மையை அறிய வேண்டும் காரணமாக இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் அதுதான் எங்களது கொள்கை என தெரிவித்தார், அதைத்தான் நேற்று ரஜினியும் தெரிவித்ததாக கூறினார்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version