தமிழகத்தில் பல ஆண்டுகால பாரம்பரியத்திற்கு சொந்தமான பத்திரிகை ஆனந்தவிகடன். ஆனால் விகடன் பத்திரிகையின் தரம் மெல்ல மெல்ல தாழ்ந்து வருகிறது.
தனக்கென இருக்கும் கௌரவத்தை இழந்து கூலிக்கு மாரடிக்கும் விகடன் பத்திரிகையைப் பார்க்கும் நடுநிலையாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மிக அநாகரீகமான முறையில் சித்தரிக்கும் கார்ட்டூன் ஒன்றை, அண்மையில் ஆனந்தவிகடன் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு மானியமாக வருடாவருடம் 6000 ரூபாய் அளிக்கும் நரேந்திர மோடி அவர்களை விவசாயிகளுக்கு எதிரானவர் என்று, விகடன் குழுமம் சித்தரிக்கிறது.
விவசாயிகளின் நலன் காக்க, நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை இந்திய தேசம் முழுவதும் உள்ள உள்ள விவசாயிகள் வரவேற்கிறார்கள். இந்த வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை தாங்களே நிர்ணயம் செய்ய இயலும்.
இதனால் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இடைத்தரகர்களின் கொட்டம் அடக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடைத்தரகர்கள் ஒன்றுகூடி விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டங்கள் நடத்துகின்றனர்.
குடியரசு தினம் அன்று இந்த போராட்டக்காரர்கள் இந்திய மூவர்ணக் கொடியை அவமானப் படுத்தி உள்ளனர். டில்லி செங்கோட்டையில் உள்ள மூவர்ணக் கொடியை தூக்கி எறிந்து, வேறு ஒரு கொடியை அங்கு ஏற்றி உள்ளனர்.
காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி பறப்பதை கண்டு பாகிஸ்தான் கொக்கரிக்கிறது. இந்த சூழ்நிலையில், அநாகரீகமான கார்ட்டூன் ஒன்றை விகடன் வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச் ராஜா அவர்கள் விகடன் குழுமத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்த அநாகரீக பத்திரிகை விகடனுக்கு ஒவ்வொரு பாஜக தொண்டனும் தக்க பாடம் புகட்ட வேண்டும். விகடன் குழுமத்தின் அனைத்து பிரசுரங்களையும் புறக்கணிப்போம் என்று ஹெச் ராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.ஒரு பாரம்பரியமான பத்திரிக்கை ஒளி இழந்து நிற்கிறது.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்