நியூஸ் 18 குறித்து நண்பர் மாரிதாஸ் அவர்களின் விடியோ வந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெறுகின்றன. தமிழக ஊடகங்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் தான் கட்டுப்படுத்துகிறது. எனவே இதற்கான மாற்று தேவை என்பதை உணர்ந்து தான் தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. அதை துவங்கி வைத்து பேசும் போதே இதை நான் குறிப்பிட்டேன்.
ஆனால் இதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். தங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்து விவாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே தமிழக ஊடகங்கள் Independent media அல்ல. இவைகள் ஒரு guided media.
இன்று தமிழக ஊடகங்களில் அதிகம் தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், அர்பன் நக்ஸல், ஜிகாதிஸ்ட், மதமாற்றத்தை தொழிலாகக் கொண்ட தீய பாதிரிக் கூட்டம் ஊடுருவியுள்ளன.
இவர்கள் அனைவருமே இந்து விரோத தேசவிரோத கும்பலைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல 1944 ல் திக வின் துவக்க மாநாட்டில் ஈ.வெ.ரா தலைமையில் அண்ணாதுரை முன்மொழிந்த தீர்மானமானத்தில் லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆங்கிலேயன் ஆள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
எனவே இவர்கள் இந்து விரோதியாக, தேசவிரோதியாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி நெறியாளர்களின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தினை பார்த்தாலே இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியும்.
உண்மையிலேயே நியூஸ் 18 மட்டுமல்ல ஒட்டுமொத்த ஊடகங்களையும் தூர்வார வேண்டும். பணி துவங்கியது.