தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான நிகழ்வுகள் தொடங்க ஆரம்பித்துள்ளது. அது கலைஞர் நாணய வெளியீட்டு விழா தான் பிள்ளையார் சுழி போட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் மட்டும் தான் இருக்கும் . ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயத்திற்கு பல அரசியல் பக்கங்கள் இருக்கின்றன. நாணய வெளியீட்டு விழா தமிழகத்தில் ஓர் அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் புயல், தி.மு.க-வை மட்டுமல்ல, அதன் கூட்டணிக் கட்சிகளையும் புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் பல புதுக்கணக்குகள் போடப்படலாம்! கூட்டணி ஆட்சிக்கு போடப்பட்ட விதை என அரசியல் விமர்சகர்கள் கூற தொடங்கியுளார்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை காங்கிரஸ் மட்டுமே திமுகவை விமர்சித்தது ஆனால் தற்போது திமுக காங்கிரசை விமர்சிக்க தொடங்கியுள்ளது இதற்ககு காரணம் நம்ம அடங்காத அசுரன் கார்த்திக் சிதம்பரம் தான்.
கார்த்திக் சிதம்பரம் பேச்சு காங்கிராஸ் திமுக இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் தற்போது திமுகவினர் காங்கிரசை விமர்சிக்க தொடங்க திமுக ஐ.டி பிரிவுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதன் தொடர்ச்சியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக நான்காம் இடத்துக்கும் 5ஆம் இடத்துக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் பல இடங்களில் டெபாசிட் பறிபோனது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பிறகு ஓரளவு எம்பிக்களை பெற முடிந்தது. இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் திமுக ஆதரவு காரணமாகவே காங்கிரஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இது ஒருபுறம் இருக்க நம்ம கார்த்திக் சிதம்பரம் எம்.பி கூவம் ஆறு மறு சீரமைப்புத் திட்டங்கள் மற்றும் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.அதோடு நிற்காமல் விஜய்க்கு ஆதராகவும் கருத்து தெரிவித்தது தான் திமுகவினரை கொதிப்படைய செய்துள்ளது.
இது குறித்து கார்த்திக் சிதம்பரம் பேசுகையில் : கூவம் விவகாரத்தில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை நான் சென்னை மேயர் இடம் கேட்டுள்ளேன். அதற்கு இன்னமும் அவரிடமிருந்து பதில் எனக்கு வரவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிப்பது இல்லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ளேன். என்றார் கார்த்திக் சிதம்பரம்.
அதோடு மட்டுமில்லாமல் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் முதலீடு எவ்வளவு வந்தது என்பது குறித்து அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு வந்தது என்பது குறித்து இவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். நான் நடுவராக இருந்து செயல்பட்டு எது சிறந்தது என்பது குறித்து சொல்கிறேன், என்றும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் கலாச்சாரம் என்பது மிகவும் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் புதுக்கோட்டையில் அவர் மாநாட்டை வைத்துக் கொள்ளட்டும். என கார்த்திக் சிதம்பரம் கூறியது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
மேலும் இது குறித்து செல்வப்பெருந்தகை முதல் யாரும் வாயை திறக்கவில்லை திமுகவும் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். குறிப்பாக கூவம் நதி குறித்து வெள்ளை அறிக்கை கேட்டதுதான் திமுகவை கட்டுப்படைய செய்துள்ளது . போதும் காங்கிரஸ் விஜய் கூட சென்றாலும் பரவாயில்லை என அறிவாலய வட்டரங்கள் கூற ஆரம்பித்துள்ளது.