இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது என்பது சட்டம் என்றே சொல்லலாம். அங்கு வேறு நாடுகளில் இருந்து செல்லும் விளையாட்டு வீராங்கனைகள் முக்காடு அணிந்து தான் அந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில்
ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய தரப்பிலிருந்து கலந்து இருந்த உலக ஜூனியர் பட்டத்தை வென்ற சவுமியா சுவாமிநாதன் இந்தியாவின் 5-ம் நிலை வீராங்கனை ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுமியா சுவாமிநாதன் இப்போட்டி தொடரிலிருந்து விலகுவதற்கு காரணம் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நான் அங்கு விளையாட சென்றால் முக்காடு அணிந்து தான் விளையாட வேண்டும் இதன் காரணமாக இந்தப் போட்டியில் முக்காடு அணியமாட்டேன் என்று கூறி அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் இது தொடர்பாக 29 வயதான சவுமியா கூறியதாவது:-
தலையில் முக்காடு அல்லது புர்கா அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.கட்டாயம் அணிய வேண்டும் என்பது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனால் ஈரானில் நடைபெறும் ஆசிய அணிகள் பிரிவு போட்டியில் பங்கேற்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















