நேற்று பாஜக சார்பில் விவசாய அணியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார் அப்போது வேளாண் சட்டத்தைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது.
நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த வேளாண் சட்டம் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது வேளாண் சட்டங்கள் நீண்ட நாட்களாக நிலைவையில் இருந்த சீர்திருத்தம். தற்போது விளை பொருட்களின் விலை, யாரிடம் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் தீர்மானிக்க முடியும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை விற்பனை செய்யலாம். மாநில வேளாண் சந்தைகள் மாற்றப்படவில்லை.
3.8 – 8.5 % வரை மண்டிகளில் கட்டணமாகவும், இடை தரகர்களுக்கு வரியாகவும் கட்டிக்கொண்டிருந்த விவசாயிகள் இனி அந்த வரியை செலுத்த தேவையில்லை குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும். எந்த வகையிலும் அது நீக்கபடமாட்டது. இது குறித்து பரப்பப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே.
வெறும் அரிசி, கோதுமைக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்த பட்ச ஆதரவு விலை ஆதாயம் 2014 ஆண்டுக்கு பிறகு இதர விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் நீட்டிப்பு.விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றபடுவதற்கு முன்பாக அனைத்து மாநில விவசாயிகளுடன், வேளாண் நிபுணர்கள் உடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இந்த புதிய சட்டங்கள் காரணமாக ஏற்படக்கூடிய குறைகளை தீர்க்க அவர்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.விவசாயிகள் தொடங்கி நுகர்வோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.பெரு நிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டும் என்ற அச்சத்திற்கு இடமில்லை என கூறினார். மேலும்
இ – நாம்’ வழியாக 1 லட்சம் கோடி மதிப்பிலான விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன எதிர்காலத்தில் விவசாய விளைபொருட்கள் நேரடியாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலமும் சந்தைபடுத்தப்பட உள்ளன. இதில் விவசாயிகள் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விளைபொருட்களை விற்க முடியும்.
கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எனக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அதற்கான தீர்வு வரையறுக்கப்பட்டு வருகிறது. என கூறினார், மேலும் செய்தியாளர்கள் ரேஷன் கடைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரேஷன் கடைகள் மூடப்படும் என்று கற்பனை செய்யப்படுகின்றது. கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்