தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். ஐ.லியோனியின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். ஐ.லியோனி பட்டிமன்ற பேச்சளராக நடுவராக இருந்தவர். அவர் அடிக்கடி பெண்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.
தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு கட்டண அடிப்ப்டையிலும் வழங்கப்படுகின்றன.இதற்கு தலைவராக லியோனி நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
லியோனி பட்டிமன்ற பேச்சாளர். அவரின் பேச்சு எப்போதும் இரட்டை அர்த்தம்படும்படி பேசுவது வழக்கம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பேசுகையில் பெண்களின் இடுப்பை பற்றி விமர்ச்சித்தார். இந்த ஆபாச பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஏன் பிரதமர் மோடி இதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த லியோனி அவர்கள் தான் தற்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவர் என அறிவித்தது தமிழக அரசு. ஐ.லியோனி நியமனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,மற்றும் ராமதாஸ்,சட்டமன்ற எதிர்க்கட்சி கட்சி துணை தலைவர் ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள்.
இந்நிலையில் நேற்று காலை பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. லியோனி ஏன் வரவில்லை என்பததற்கான காரணமும் பாடநுால் கழகத்துக்கு அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், லியோனியின் நியமனம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, தமிழக அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.