கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் பாரத மாதா பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் திமுக ஜெயித்தது கிருஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஒரு கிறித்தவ ஆலோசனை கூட்டத்தில் பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னய்யா என்பவர், “பாரதமாதா மிகவும் அசிங்கமானவள் மற்றும் ஆபத்தானவள். அவளை மிதித்தால் நமக்கு சொறி சிரங்கு போன்ற நோய்கள் வந்துவிடும். அதனாலேயே நான் செருப்பு அணிகிறேன். சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு மேலாடையின்றி செல்லும் ஆண்கள் கிறுக்கன்கள்” என பேசி இருக்கிறார்.
மேலும் பாரதமாதா பற்றி பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம்.நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு.. சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள்.. ‘எங்கள் முடி.. ரோமத்தை கூட..’ ரோமம் என்ன எங்கள் பாஷையில், எங்க மயிரை கூட நீங்க பிடிங்க முடியாது.. என மிக கொச்சையாக பேசினார்.
இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது தமிழகமெங்கும் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து பாதிரியார் ஜார்ஜ் உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இதனால் விஷயம் பெரிய அளவில் வெடித்தது. இதனை எதிர்பாராத தமிழக அரசு அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் கைது செய்ய உத்தரவிட்டது. கைதும் செய்தது.
இந்த நிலையில் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு ஜாமின் அனுமதிக்க வேண்டும்’ என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டு, பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது.சிறுபான்மையினருக்கு ஆளுங்கட்சி தந்த தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது சட்டவிரோதமல்ல.கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு இதய பிரச்னை உள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.