திருப்பூரில் உள்ள மங்கலத்தில், இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில், வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கொண்டு பேசினார். அவரின் பேச்சு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அவர் பேசியதாவது :
நான் வருவதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.அதுமட்டுமில்லமால் எனது வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடந்தது. நம் வாழும் தேசத்தின் ஒற்றுமைக்காக வாழ்வது தான், உண்மையான மத நல்லிணக்கம். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் இருக்க கூடிய, இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இஸ்லாம் மக்களை நேசிக்க கூடிய இந்து சகோதரர்கள் எல்லாம், உங்களை வெறுக்கும் நிலையில் உங்கள் போராட்டம் உள்ளது.
குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இருக்கிறது என்று யாராவது நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்.சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த முதல் நபர் நான். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இங்கு இஸ்லாமியர் வாழ்வது, ஒரு தவம். இந்துக்களோடு சேர்ந்து, நான் போராடி கொண்டு இருக்கிறேன்.
இஸ்லாமிய சகோதரர்களே சிந்திக்க வேண்டும். சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். உங்களை நினைக்கையில் கண்ணீர் வருகிறது. நான் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன். இவ்வாறு, இப்ராஹிம் பேசினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















