குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில செயல் தலைவர் ஹர்திக் படேல் கடந்த மே 19-ஆம் தேதி தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைந்து உள்ளார். குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தாா்.
முன்னதாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், தேச நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என அவா் பதிவிட்டு இருந்தாா்.
மேலும், காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை பா.ஜ.க வில் இணைக்கும் நிகழ்ச்சியை 10 நாட்களுக்கு ஒருமுறை செய்வோம். பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை என அவா் தொிவித்தாா்.
குஜராத் சட்டசபை தேர்தல் இந்தாண்டு நடக்க உள்ளது. ஹர்திக் படேலின் வருகை, பா.ஜ.,வுக்கு வலிமை சேர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.,ஆட்சி நடக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ள, எதிர்ப்பாளர்களையும் பா.ஜ, சேர்த்து வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















