மதுரையில் நடந்த பா.ஜ.க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லும்போது, மோடியும் தமிழர்தான். தி.மு.க அமைச்சரவை 35 அமைச்சர்களில் எத்தனை அமைச்சர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.
எத்தனை அமைச்சர்கள் வீடுகளில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. குஜராத்தில் பிறந்து தமிழகத்தின் பெருமையும் தமிழையும் பெருமையாக பேசும் மோடி அவர்களும் தமிழர் தான். தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியை பெறுவார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை சம்மந்தமே இல்லாத ஊரில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் அந்த மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களே தி.மு.க-வும், காங்கிரஸும்தான்.
இந்நிலையில் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் காலத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் கலைஞர் என பெயர் வைக்க வேண்டும் என்றாலும் கூறுவார்கள் போல.
பத்திரப்பதிவுத்துறையில் ‘மூர்த்தி பீஸ்’ என தனியாகவே வாங்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவுத்துறை மிக மோசமாக பண வசூல் துறையாக மாற்றியுள்ளது
லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடி கோடியாக சிக்கும். அதில் தமிழ்நாடு பாதி கடனை அடைத்துவிடலாம்.”
தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை.
தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் மோடி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோர். 2024 மட்டுமல்ல 2038 வரை மோடிதான் பிரதமர்.
மோடிதான் உண்மையான தமிழர். ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லும்போது, மோடியும் தமிழர்தான்.இவ்வாறு அவர் கூறினார்.