பீகார் தேர்தலில் முஸ்லிம் தலைவர் ஒவைசி தனியாக நின்று 5 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் இதனால் சிறுபான்மை வாக்குகளை நம்பி இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் ஒட்டுக்களை நம்பித்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. ஒவைசியும் தன இன மக்களின் ஆதரவை நம்பி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களுக்காக இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார். இந்த ஒவைசி போன்ற ஆட்கள் இங்கு வந்து தனித்து போட்டியிட்டால் தி.மு.கவுக்கு கிடைக்கும் சிறுபான்மை வாக்குகள் காலியாகி விடும்.
பீகார் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஓட்டு க்களை குறிவைத்து இறங்கிய காங்கிரஸ். ஏன் பெரும்பான்மை மக்களை பற்றி சிந்திக்க வில்லை. சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஓகே தான்.அதே நேரம் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற ஏன் தவறியது.சிறுபான்மை மக்களை கொண்டாடும் அதே நேரத்தில், பெரும்பான்மை மக்களை புறக்கணித்தால் இதுதான் கதி.
ஓவைசி ஆகட்டும் அல்லது வேறு யார் ஆகட்டும், அவர் அவர் வளர்ச்சி பெறத்தான் முயற்சி செய்வார்கள்.அதற்கு அவர்களுக்கு தெரிந்த வழிகளில் செல்வார்கள். ஒவைசி வளர்க்கிறார். காரணம், தமிழக முஸ்லிம் தலைவர்கள் மாதிரி திராவிடக் கட்சிகளின் காலடியில் கிடக்காமல், தனித்து தன் மக்களை இணைக்கிறார். அதனால், அந்த வெற்றி.
இங்கே தமிழகத்தில் முஸ்லிம்களின் கட்சியையோ, முஸ்லிம் தலைவர்களையோ வளரவிடாமல் தடுத்து வைத்திருந்தது கருணாநிதி, ஜெயலலிதாவின் சாதனை. இந்தப் பக்கம் ஒரு முஸ்லிம் கட்சி, அந்தப் பக்கம் ஒரு முஸ்லிம் கட்சி என்று பிரித்து வைத்து அவர்களின் ஓட்டுகளை மட்டும் சுவைத்துக் கொண்டு வந்தனர்.
தமிழக முஸ்லிம் மக்களுக்கும் உணர்வுப் பூர்வமான நிஜமான தலைவர்கள் இல்லை. எல்லாம் காசுக்காக விலை போகும் ஆட்கள் தான். அந்த வகையில் நேர்மையாக நான் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் ஓட்டுகளைத் தான் ஒருங்கிணைப்பேன் என்று களமாடும் ஒவைஸி தமிழகம் வந்தால் திமுக கதி அதோகதி தான்!