தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மதுரை தேனி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் , அனைத்து மாவட்டங்களிலும் வினோஜ் அவர்களுக்கு மிக பிரமாண்ட வரவேற்பு அளித்து வரவேற்றார்கள். எதிர் கட்சிகள் இது பா.ஜ.க வா என வாய் பிளக்கும் அளவிற்கு வரவேற்பு அமைத்தது. இளைஞர்கள் பட்டாளம் பாஜகவை நோக்கி செல்கின்றது எனபதை இது காட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக திராவிட கட்சிகள் சற்று கலக்கத்தில் உள்ளது.
இராமாநாதபுரத்தில் பேசிய வினோஜ் அவர்கள் 2021 தேர்தலை முடிவு செய்யும் சக்தியாக பா.ஜ.க இருக்கும் 12 கோடி தொண்டர்களையும், 300 எம்.பிக்கயும் கொண்ட உலகில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது என கூறினார். மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு துணை நின்ற திமுகவை வரும் தேர்தலில் பாஜக வதம் செய்ய வேண்டும். 2021 தேர்தலில் புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் வகையில் இளைஞரணி தொண்டர்கள் செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வினோஜ் அவர்கள் ”இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும்” என பேசினார். திமுக நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார் வினோஜ் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் இளம் தாமரை ராணுவ படையை அறிமுகம் செய்து வைத்த வினோஜ், அங்கிருந்து புறப்பட்டு உசிலம்பட்டி நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் படை சூழ புறப்பட்டார். செக்கனுராணியில் அமைந்துள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வினோஜ் தலைமையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.அதனை தொடர்ந்து தேனி செல்லும் வழி எங்கும் பேனர்கள் பா.ஜ.க கொடி என அமர்களப்படுத்தினார்கள்.
பாஜக இளைஞரணியினர்.