இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு தொடக்க தினத்தை ஒட்டி இன்று,விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி பகுதியில், விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவரும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் செந்தில்குமார், விழுப்புரம் மாவட்டத்தில் 1,016 மரக்கன்று நடும் பணியிணை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
உடன் இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் தகடி ஏழுமலை, மாவட்ட செயலாளர் பொன்முடி, விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி, தலைமை நிலைய பேச்சாளர் சிதம்பரநாதன், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் தங்கவேல் உடையார், நிர்வாகி தணிகாசலம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கருணாநிதி,சுரேஷ், ஐஜேகே நிர்வாகிகள் சௌந்தரராஜன், லஷ்மி நாராயணன்,குபேந்திரன்,தாமஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















