நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு கூறினார்
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறை வளர் பெரும் பித்தனே.
ஏன் பித்தன் பித்தனிடம் ஒன்று போய்விட்டால் அது திரும்ப வராது . அதுபோல பித்தன் சிவபெருமானிடம் அடியார் பக்தர்கள் சென்றால் எங்கும் எதிலும் நம்மை தடுத்தாட்கொள்வான்.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்.
அவர்கே ஆளாவோம் எழுபிறப்பும்.
மதுரை அரசன் அடித்த பிரம்படி அனைவருக்கும் பட்டது கர்பத்தில் தரித்த உருவமே இல்லாத சிசுவுக்குமே அந்த தழும்பு இருத்ததாம்.
ஏனெனில் அவர் அனைவரின் உயிரிலும் கலந்தவர்
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் – பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
வள்ளலார்
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை;
அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை;
அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது.
அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
முப்பத்து முக்கோடி தேவர்கள் மீதும் விழுந்த முழு பிரம்படி நம் அப்பனுக்கு மட்டும் பாதி அடியே விழுந்ததால் மீது பாதி உமையம்மை மீது விழுந்தது…..
Get real time update about this post categories directly on your device, subscribe now.














