காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு தொடர்ந்து,இடிமேல் இடி விழுவது போல் ஒவ்வொரு சம்பவமும் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சியின் இண்டியா கூட்டணியில் மேற்குவங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ்,பஞ்சாபில் ஆம் ஆத்மி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி ஆகியவை காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்காமல் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு சீட்டு மட்டுமே காங்கிரசுக்கு அளிக்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்த, நிலையில் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் காங்கிரசை புறக்கணித்து வரும் நிலையில்,
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரசுக்கு 11 தொகுதியில் என அறிவித்த நிலையில் எந்தெந்த தொகுதிகள் என இதுவரை முடிவாகாமல் உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வரும் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் தான் பங்கேற்க வேண்டுமென்றால், முதலில் எந்தெந்த தொகுதி என முடிவு செய்த பின்பே இந்த யாத்திரையில் எங்கள் கட்சி பங்கேற்கும் என அறிவித்துள்ளதால், காங்கிரசுக்கு இடிமேல் இடியாக விழுந்து கொண்டே வருகின்றது.