வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதீத பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டி கூட்டணியில் தி.மு.கவை ஹிந்தி கற்க சொன்ன பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள்உள்ளது. இண்டி’ கூட்டணியின் நான்கு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை பரிந்துரை செய்தார். இதனால் நிதிஷ் குமார் தனது அதிருப்தியை டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ‛இந்தியா’ கூட்டணியில் வெளிக்காட்டினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ‛இந்தியா’ கூட்டணியில் வெளிக்காட்டினார். நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியதை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர்.பாலுவுக்கு புரியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய டிஆர் பாலு கூறினார்.
“இந்தி நமது தேசியமொழி. எனவே நாம் அனைவரும் அதை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி” என்று ஆவேசமாக பேசினார்.நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை. பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேச்சும் கூட மொழிபெயர்க்கப்படவில்லை இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த நிலையில் ‛இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் வழங்காத பட்சத்தில் அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என்ற தகவல் பரவ தொடங்கியது. இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு தற்போது ‛இண்டி கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது திமுகவை அதிருப்தி அடைய செய்துள்ளது.மேலும் வெளிப்படையாக திமுகவினரை ஹிந்தி கத்துக்க சொன்னார். இந்து ஹிந்திக்கு எதிராக பேசும் திமுகவோ அங்கு பொட்டி பாம்பை அடங்கி உள்ளது என இது தமிழகத்தில் திமுகவை பின்னடைய செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தனியாக நிற்பதற்கு யோசிக்கும் திமுக இண்டி கூட்டணியில் நீடித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு இண்டி கூட்டணியில் எதிர்ப்பை கிளப்பியது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத்திடம் உதயநிதியின் கருத்து குறித்து கேட்டபோது, “அது அவருடைய கருத்து. ஆனால், அதில் நான் உடன்படவில்லை” என்றார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மமதா பானர்ஜி நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். என்றார் இண்டி கூட்டணி தலைவர்கள் திமுகவை விமர்சனம் செய்ய துவங்கியது. அது மட்டுமில்லாமல் ராமர் கோவில் திறப்பு விழா நேரத்தில் இப்படி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது நல்லதல்ல வட இந்தியாவில் இது மிக மோசமான விளைவுகளை இண்டி கூட்டணி சம்பாதிக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் நிதிஷ்குமாருக்கு முக்கிய பதவி வழங்க பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் இந்த வாரமே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுடன் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நிதிஷ்குமார் நேற்று பேசியுள்ளதாகவும், அதோடு நிதிஷ் குமாரை ஒருங்கிணைப்பாளராக்கும் முடிவுக்கு ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.