பிரதமா் வீட்டு வசதித் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் 5 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இணையவழி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 35 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுளதாகவும் .
மேலும் 65 லட்சம் வீடுகள் அந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. என் தெரிவித்தார் மேலும் அவர் பேசுகையில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளின் மூலமாக 3.65 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். அதில் 1.65 கோடி வேலை வாய்ப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டன.என் தெரிவித்தார்
தற்போதைய நிலையில் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ளவற்றில் 22,000-க்கும் அதிகமான வீடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
நகா்ப்புறங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தற்போது வரையில் 79 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பும், 45 லட்சம் கழிவுநீா் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 76 லட்சம் பழைய தெருவிளக்குகள் எல்இடி விளக்குகள் கொண்டு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஆண்டுக்கு 167 கோடி யூனிட்டுகள் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. காா்பன் வெளியேற்றமும் 13 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது.
100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை மேற்கொள்ள உள்ளன . அதில் ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பில் 4,700 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலக வரலாற்றிலேயே நகா்மயமாதலுக்காக மிக விரிவான திட்டங்களை இந்தியாவே மேற்கொண்டுள்ளது என்று அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்