ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில். இதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாகபல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றுலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளுடன் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்க ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்றார். உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க ஊக்குவிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

லடாக் எல்லை விவகார பிரச்சனையில் சீனா மீது பா.ஜ.க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்ததன் மூலம், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையில் 22% குறைத்திருக்கிறோம்.ரூபாயில் 10 லட்சம் கோடிக்கும் மேல். சீன இறக்குமதி மதிப்பு கடந்தாண்டு இதே காலப்பகுதியில் இருந்து 27.63 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னையை தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது மற்றும் இறக்குமதிக்கு தடை செய்தததன் மூலம் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்திய சீன இறக்குமதி மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் சீன இறக்குமதியானது 49 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது ஜூலை மாதத்தின் 55.8 கோடி டாலராக இருந்தது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 27.63% குறைந்து 21.58 பில்லியன் டாலராக இருந்தது எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Exit mobile version