இந்தியா சீனா எல்லை இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது கடந்த வரம் இரு நாட்டு வீரர்களிடேயே மோதல் சம்பவம் நடைபெற்றது இதன் பின் இரு நாட்ட அதிகாரிகள் பேசிய சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது சீனாவை நம்பமுடியது என்ற காரணத்தினால் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளது இந்தியா.இந்தியா தனது சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.
ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.இந்தியா இனி கிழக்கு லடாக்கில் 30 ஆயிரம் வீரர்களை கொண்ட நிரந்தர முகாமை அமைக்க முடிவு செய்துவிட்டது படிபடியாக அந்த எண்ணிக்கை எட்டபடும்
கட்டுமானங்கள் சாலை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது, சக்திவாய்ந்த ஹெலிகாப்டர்களும் உளவு விமானங்களும் பறந்து கொண்டிருக்கும் நேரம் கூடுதலாக பீஷ்பா டி 90 ரக டாங்கிகளை ஏராளம் அனுப்புகின்றது. இவ்வகை டாங்கிகள் நிலம், நீர், மலை என எல்லாவற்றிலும் செயலாற்ற கூடியது, அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை லடாக்க்கில் நிறுத்த திட்டமிட்டு ராணுவ சரக்கு விமானம் மூலம் ஏற்றி லடாக்கில் கொண்டு சேர்த்து எல்லையினை பலபடுத்துகின்றது இந்தியா
ஒரு பெரும் முடிவோடுதான் நிற்கின்றது தேசம், அது இனி விட்டுகொடுப்பதாக இல்லை உத்தேசம்