இன்னும் 5 ஆண்டு களில் இந்தியா ஜெர்மன் ஜப்பானைஓரங்கட்டி விட்டு 3ம் இடத்திற்குவர முடியும் என்கிறது ஐஎம்எப்.
ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே இந்தியாவின் உண்மையான உற்பத்தி
திறனை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
கடலை மிட்டாய்க் கெல்லாமா
ஜிஎஸ்டி என்று சில கோமாளிகள் கேட்கிறார்க ள்.
எங்கள் ஊரில் ஒரு கடலை மிட்டாய் கம்பெனி வைத்து இருந்தவர் 10 வீடுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்.
எந்த கணக்கும் கிடையாது. எங்கள் தெருவில் உள்ள ஒருவர் மொ த்த காய்கறி கமிசன் கடை வைத்து இருந்தார் காலையில் 4-10 மணி வரை தான் கடையில் வேலை இருக்கும்.
ஒரு நாளைக்கு சர்வசாதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும்.
எந்த கணக்கு வழக்கும் கிடையாது. இதெல்லாம் 1990களில் நான் நெல்லையில் இருந்த பொழுது கண்கூடாக பார்த்து இருக்கிறேன். அப்பொழுதே அவர் கோடீஸ்வரர்.
எந்த ஒரு வரியையும் அவர் கட்டியதில்லை. வியாபாரத்தில் பல கோடி சம்பாதிக்கும் லட்சகணக்காணோர் இது வரை ஒத்தை ரூபாயை கூட வரியாக செலுத்தியது இல்லை.
இவர்கள் அனைவரும் வரி செலுத்த ஆரம்பிதால் இவர்களின் உற்பத்தியும் கணக்கில் வரஆரம்பித்தால் மோடியின் கனவான 5 ட்ரில்லியன் ஜிஎஸ்டியை இந்தியா 2025 க்குள் எட்டிவிடும்.
ஆனால் அரசாங்கம் சரியில்லை என்று அந்த ஆள் பீடிகுடித்துக்கொண்டே குறைசொல்லிக் கொண்டு இருப்பார்.
பீடி குடிக்கிறவன் கூட இப்பொழுது ஜிடிபி பற்றி பேசுகிறான் என்றால் அதற்கு மோடி தான் காரணம்.
ஒரு காலத்தில் பொருளாதார
ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே உலவி வந்த ஜிடிபி என்கிற வார்த்தை இப்பொழுது டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் கேட்கிறது என்றால் மோடியை குறை சொல்வதற்காவது ஜிடிபியை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
நம்முடைய நாட்டில் இப்பொ ழுது கிராமங்க ளில் கூட மொபைல் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனை படுவேகமாக சென்று கொண்டு இருக்கிறது.
பல விசயங்களை இன்று சாமானியமக்கள் அறிந்துள்ளனர்.என்றால் அதற்கு காரணம் மோடி தான்
இதற்கு மேல் இந்தியாவில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்.
மோடி தலைமையில் இந்தியா நல்லதிசையில் மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறது என்பதை உவகமே உணர்ந்து போற்றி வரும் நிலையில் உள்ளூர் கோமாளிகளின் கிண்டல் பற்றி எங்களுக்கு கவலை
இல்லை.
கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.