நம்நாட்டில் ஆயுதம் வாங்குவதற்கு டென்டர் விட்டு வருவதே இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் மோடி ஆட்சியில் இந்தியா ஆயுதங்களை விற்பதற்கு பிற நாடுகளில் நடைபெறும் டென்டர்களில் கலந்து கொள்ளஆரம்பித்து விட்டது.
இந்தியாவின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது.
ஆச்சரியமான விசயம் என்ன வென்றால் ரஷ்யாவுடன் ஒரு ஆயுத டீலிங்கில் போட்டி போட்டு அந்த ஆர்டரை இந்தியா கைப்பற்றி உலக நாடுகளை வியக்க வைத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து இப்பொழுது தனி நாடாக விளங்கும் அர்மேனியா ரஷ்ய நாட்டினை புறக்கணிக்து இந்திய ராடார்களை வாங்க முன்வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
உலகத்திலேயே கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு அர்மேனியாதான் .உலகின் பாரம்பரிய நாடுகளில் ஒன்றான அர்மே னியா இந்தியாவுக்கு இன் னொரு போட்டியாளராக இருந்த போலந்து நாட்டையும் புறம் தள்ளி விட்டு இந்தியாவுக்குஆர்டர் அளித்து ள்ளது
சுவாதி வெப்பன் லோகேட்டிங் ரேடார் என்கிற ரேடாரை இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனமும் பெல் நிறுவனமும் இணைந்து மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
40 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஆர்ட ரை ரஷ்யா போலந்து நாடுகளை ஒவர்டேக்செய்து இந்தியா கைப்பற்றி உள்ளதை பார்க்கும் பொழுது இந்தியா வல்லரசு நாடுகளை போல பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்ஆயுத சந்தையாக மாறி வருகிறது.