ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது. தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாகி வரும் நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பு திடீரென்று பல்டி அடித்துள்ளது. அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளதுஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தின் அருகே பைசரன் என்ற புல்வெளி பகுதி உள்ளது. கடந்த கடந்த 22ம் தேதி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவித்தனர். அப்போது ராணுவ உடை அணிந்து 4 பயங்கரவாதிகள் வந்து பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். 12 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக அந்த அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதோடு, இது லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணைப்பிரிவாக உள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் சல்லடை போட்டு சட்ட விரோதமாக இருக்கும் நபர்களை தட்டி தூக்கி வருகிறது. காஷ்மீர் தாக்குதலுக்கு உதவியதாக சந்தேகப்படும் 175 பேரை தட்டி தூக்கியுள்ளது. இந்திய ராணுவம். தீவிரவாதிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாகி உள்ளது. மேலும் இந்தியாவில் முழுவதும் இந்திய ராணுவம் காட்டுப்பாட்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் லக்ஷர் தொய்பா தளபதி சுட்டு கொல்லப்பட்டுள்ளன்
மேலும் இந்தியா முப்படைகளையும் பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது. இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பல்டியடித்துள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பஹல்காம் சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த தெடர்பும் இல்லை என்பதை டிஆர்எஃப் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக எங்கள் மீது குற்றம்சாட்டுவது தவறானது மட்டுமின்றி அவசரமானதோடு காஷ்மீரை அவமதிக்கம் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். பஹல்காம் தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு எங்களின் டிஜிட்டல் பிளாட்பார்மில் எங்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு மெசேஜ் பதிவிடப்பட்டது.
முதலில் காஷ்மீர் தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பு அறிவித்தது. ஒருவேளை அவர்களின் வலைதள பக்கத்தில் தவறாக பதிவிடப்பட்டு இருந்தால் அதனை உடனடியாக நீக்கி இருக்கலாம். இல்லாவிட்டால் உடனடியாக மறுப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை என்பது முற்றி மோதல் வெடிக்கும் வரை அந்த அமைப்பு காத்திருந்து இப்போது அறிக்கை விடுவது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
இதனால் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதை பார்த்து அந்த அமைப்பும், பாகிஸ்தானும் பயந்தது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது தற்போது பாகிஸ்தான் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தை ஓடஓட தாலிபான்கள் விரட்டியடித்தனர். அதன்பிறகு பலுசிஸ்தான் அமைப்பினர் உள்நாட்டில் நடத்திய தாக்குதலிலும் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்பை சந்தித்தது.
பாகிஸ்தானின் ராணுவ பலம் இப்படி இருக்கும்போது நம்மிடம் மோதினால் அது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் புறமுதுகை காட்டிவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். மேலும் தற்போது முதற்கட்டமாக நம் நாடு பாகிஸ்தானுக்கு சில முக்கிய விஷயங்களில் கைவைத்துள்ளது.இதற்கிடையே நம் நாட்டுடன் மோதினால் அது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்தை இன்னும் அதிகமாக பாதிக்கும். அதோடு இந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பெரும்பான்மையான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்பட பல உலக நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை உணர்ந்து தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இன்று அறிவித்தார். இப்படி பாகிஸ்தான் பயந்து வரும் நிலையில் தான் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களும் தொடர்பு இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















