இந்தியா உலக சுகாதார அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உடைய எக்சியூடிவ் கவுன்சில் சேர்மனாக வருகின்ற 22 ம் தேதி பதவி ஏற்க இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு முக்கியமான முடிவுகளை இந்தியா நேற்று எடுத்து இருக்கிறது ஒன்று உலக சுகாதார அமைப்பில் தைவானை கொண்டு வர வேண்டும் என்று ஆஸ்திரேலியா தலைமையில் அணி வகுத்துள்ள நாடுகளின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து இருக்கிறது.
அதோடு கொரானா வைரஸ் சீனாவில் இருந்து உருவான விதம் பற்றி நீதி விசாரணையை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலி யா தலைமையில் ஒன்று கூடியுள்ள 62 நாடுகளின் கோரிக்கை க்கு இந்தியா ஆதரவு அளித்து இருக்கிறது.
அதோடு இந்தியா உலக சுகாதார அமைப்பின் எக்சியூடிவ் கவுன்சில் சேர்மனாக உட்கார்ந்த உடன் 34 நாடுகளின் உறுப்பி னர்கள் அடங்கிய எக்சியூடிவ் கவுன்சி லை சீரமைக்க வேண்டும் என்கிற உலக நாடுகளின் கோரிக்கையையும் இந்தியா ஏற்று கொண்டுள்ளது.
இதுவரை கொரானா வைரஸ் விசயத்தி ல் சீனாவை மற்ற நாடுகள் குற்றம் சாட்டிய பொழுதும் இந்தியா அமைதியாகவே இருந்தது. தைவான் தனி நாடு கிடையாது சீனாவின் அங்கம் தான் என்று சீனா கூறி வருவதால் தைவானை உலக சுகா தார அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தலைமையில் பல நாடுகள் கூறி வருவதற்கும் இது வரை அமைதியாக இருந்த இந்தியாஇப்பொழுது தைவானுக்கு ஆதரவாக ்இறங்கி இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர்டெட்ரோஸ் அதானோம் கொரானா வைரஸ் பற்றி உலகத்திற்கு தவறான தகவல்களை அளித்து சீனாவின் ஏஜென்ட் டாக செயல்பட்டார் என்றும் இதனால் அவர்மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற உலக நாடுகளின் கோரிக்யையும் இந்தியா ஏற்று இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் சேர்மனாக பதவி ஏற்கும் முன்பே இந்தியா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது. இனி சேர்மனாகபதவி ஏற்ற பிறகு என்னென்ன அதிரடிகளை செய்ய இருக்கிறதோ அந்த மோடிக்கே வெளிச்சம்.
வலது சாரி சிந்தனையாளர் : விஜயகுமார் அருணகிரி