உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில். இதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாகபல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றுலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளுடன் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்க ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்றார். உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க ஊக்குவிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். தமிழக ஊடகங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி பேச ஆரம்பித்து வீட்டார்கள். எல்லாத்தையும் இறக்குமதி செய்துவந்தால் , ஜீடிபி எப்படி உயரும்? என்ற கேள்விகள் தினமும் கேட்கின்றனர். எதற்காக இந்த திடீர் பொருளாதாரம் சம்மந்தமாக கேள்வி எழுப்புகிறார்கள் என தெரியவில்லை. அதற்கு பதில் தரலாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஏற்படுத்தி வைத்து விட்டுப் போன ஒப்பந்தங்களால் சீனாவிலிருந்து அதீத இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடிதள்ளப்பட்டது இந்தியா. 70 வருட ஒப்பந்தங்களை எப்படி சரி செய்வது என்பதை கவனத்துடன் சரி செய்து வருகிறது மோடி அரசாங்கம்
,சீனா மீது பாஜக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்ததன் மூலம், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையில் 22% குறைத்திருக்கிறோம். டாலரில் 14 பில்லியன். ரூபாயில் 10 லட்சம் கோடிக்கும் மேல்.கொரானா காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி இல்லை அதனால் குறைந்திருக்கும் என்றும் சில அரசியல்வாதிகள் போராளிகள் சொல்லிவருகிறார்கள் , அதே காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ததில் மிக அதிகமாக அனுப்பியது, அதே சீனாவுக்கு தான். வழக்கத்தை விட 22% ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம்.வழக்கத்தை இட 40.66 % இறக்குமதியைக் குறைத்துள்ளோம். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது ? இறக்குமதி செய்யாத அந்த 40.6% பொருட்களின் தேவைகள் எப்படி பூர்த்தியானது? உள்நாட்டில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தயாரித்தால், GDP எப்படி குறையும்?
இது தவிர IMF ஒரு forecast GDP கொடுத்திருக்கு. கொரோன காலகட்டத்தில் உலகமே பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கிறது இந்த நிலையில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதலாவது இடத்தில உள்ளது. தனது ஜிடிபியை மைனஸ் ஆகிவிடாமல் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
தற்போது இந்தியா மற்றும் தமிழகத்தில் பாஜகவை எதிர்க்க வேண்டுமானால் ஒரு புள்ளிவிபரம் தயாரித்து, அதை உங்ககளுக்கு வேண்டிய பத்திரிக்கையில் நீங்களே கொடுத்து, அப்புறம் அதையே ஆதாரமாகக் காட்டி சமூக வலைத்தளங்களில் எழுதுவதெல்லாம் வழக்கமாகிவிட்டது.
இந்தியா தனது வளர்ச்சி பாதையில் வீறுநடை போட்டு செல்கிறது என்பது தான் நிதர்சனம்!