”உலக அளவில், 3 டிரில்லியன் டாலர் (236 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தோடு இந்தியா வளர்ந்து உயர்ந்து நிற்கிறது,” மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, ‘இன்வெஸ்ட் இந்தியா’ ஆகியவை இணைந்து தொழில் நிறுவன அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியுஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது :
இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. . டிஜிட்டல் வர்த்தகம் மூலம் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. வணிக நிறுவனங்கள், நுகர்வோர் இடையே பாலமாக விளங்குகிறது. டிஜிட்டல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள நல்ல வாய்ப்புகளைப் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்டது. நாட்டின் பொருளாதாரம் தற்போது 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக (236 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. உலகத்தில் மிகுந்த நம்பகத்தன்மையுடைய தலைமை மற்றும் ஜனநாயக கட்டமைப்புடன் நம் நாடு திகழ்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது.அனைத்து துறைகளிலும் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் வெளிப்படையான நிர்வாகத்தை, மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கொள்கை முடிவுகளில்அடிப்படை தன்மை தெளிவாகவும் நிலையாகவும் உள்ளதால் மிக கட்டுக்கோப்பான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீட்டையும் மதித்து வருவதால், ஜவுளி, பொறியியல் உள்ளிட்ட துறைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















