ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்தியங்களின் அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள்.மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்றது . இதில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்துக்கா இந்தியா போட்டியிட்டது. இதில் இந்தியாவுக்கு ஆசிய – பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா பாகிஸ்தான் உட்பட 55 நாடுகளும் அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின். 193 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்து.ஒவ்வொரு நாட்டுக்கான நேரத்தை தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே அனைத்து நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மண்டபத்தில் ஒட்டு பதிவு நடைபெற்றது ஓட்டளிக்கும் பிரதிநிதிகளுக்கு என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 11:30 மணி முதல் 12:00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளும் ஓட்டளித்த பின் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 184 ஓட்டுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்து இந்தியாவை இமாலய வெற்றி பெற வைத்தன உறுப்பு நாடுகள். இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றன. இந்தியா 8வது முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















