விஷயம் வேறொன்றுமில்லை, ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நேரமிது அல்லது குறைக்கபோகின்றார்கள் இதை தன் தேர்தல் பிரச்சாரத்திலே சொல்லிவிட்டார் டிரம்ப்
இந்நிலையில் ஆப்கனில் அடுத்து கால்பதிக்கும் நாடு எது என்பது உலக எதிர்பார்ப்பு, 1989க்கு முன்பு இந்தியா ஆப்கனில் தன் பிடியினை வைத்திருந்தது அதாவது சோவியத் ஆப்கனை கட்டுக்குள் வைத்திருந்த நேரம் பாகிஸ்தானை இடுக்கில் மாட்டிய எலிபோல் வைத்திருந்தது இந்தியா
அந்நேரம் அமெரிக்க உதவி மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே மறைந்திருக்கும்
எனினும் பின் ரஷ்யா வெளியேறியதும் அமெரிக்கா தாலிபான் பாகிஸ்தான் கூட்டணி வந்தபின் இந்திய பிடி தளர்ந்தது அதன் பின்பே ஆப்கன் கூலிபடை காஷ்மீருக்கு வந்து பெரும் தீவிரவாதம் வளர்ந்தது
இப்பொழுது காட்சிகள் மாறிவிட்டன, அமெரிக்கா பாகிஸ்தான் உரசல். இந்திய ஆப்கன் நல்லுறவு என ஏகபட்ட விஷயங்கள் வந்தாயிற்று
இந்தியா ஆப்கனில் தன் பிடியினை வைக்க அவ்வப்பொழுது ஏகபட்ட கோடிகளை நன்கொடையாக வழங்கும், அப்படி மோடி அரசும் வழங்கிற்று
உலக அரசியல் தெரியா தமிழக அரசியல் கழுதைகள் இதற்கு கத்தின, உள்ளூர் சாலை சரியில்லா பொழுது ஆப்கனுக்கு பல்லாயிரம் கோடியா என்றெல்லாம் குதித்தன
உலகில் ஆதாயம் இல்லாமல் யாரும் சல்லிகாசு கொடுக்கமாட்டார்கள், இந்தியா கொடுத்ததின் அர்த்தம் இப்பொழுது உலகுக்கு தெரிகின்றது
சமீபத்தில் ஆப்கன் வந்த அந்நாட்டின் தேசிய ஆலோசகர் இந்திய அமைதிபடை ஆப்கனுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றார் அல்லது அழைப்பு விடும்படி அறிவுறுத்தபட்டிருக்கின்றார்
இந்தியா இதை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டது அதன் அர்த்தம் இந்திய படை ஆப்கனுக்கு செல்லலாம்
அப்படி செல்லும் பட்சத்தில் ஆப்கனில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் , வர்சிஸ்தான் பகுதியில் இந்திய கரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானை உடைத்து போடும் அளவு விஷயம் நடக்கலாம்
காஷ்மீருக்கு அப்பக்கம் இருந்து பாகிஸ்தான் தொல்லை கொடுப்பது போல இனி பாகிஸ்தானுக்கு அப்பக்கம் இருந்து இந்தியா பாகிஸ்தானை கடிக்கும்
இது தேர்ந்த ராஜதந்திர திட்டம் என்பதால் உலகம் இதை கவனிக்கின்றது
இத்திட்டம் நிறைவேறி இந்திய அமைதிபடை ஆப்கன் செல்வதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்பதால் அது கடும் பதற்றத்தில் திரிகின்றது ஆனால் நிலமை அவர்களுக்கு சாதகமாக இல்லை
இந்திய அமைதிபடை முன்பு இலங்கையில் இருந்த பொழுது புலி மற்றும் திமுக கூட்டணி ஏகபட்ட அழிச்சாட்டியங்களை செய்து இந்திய படையினை திரும்பவர வைத்தது, ஆப்கனில் விடுதலை புலி இல்லை எனினும் ஆப்கன் இஸ்லாமியரை இந்திய படை கற்பழிக்கின்றது, ஆப்கன் இஸ்லாமிய பெண்கள் திராவிட தமிழகத்துக்கு கொண்டைமுடி உறவு என திமுக கிளம்பினால் சந்தி சிரித்துவிடும்
விரைவில் ஆப்கனில் இந்திய ராணுவம் கால் வைக்கலாம் என்கின்றார்கள், இந்திய அமைதிபடை ஆப்கனில் நிலைத்துவிட்டால் பாகிஸ்தான் உடைவதை தடுக்க முடியாது, யுத்தம் என வந்தால் இடுக்கில் மாட்டிய எலி போல அந்நாட்டை நசுக்கியே விடலாம்
ஆக குறைந்தபட்சம் காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிட்டால் பலுசிஸ்தானை விடமாட்டோம் என இந்தியா லாபி செய்து பாகிஸ்தானை முடக்கலாம்
மிக தேர்ந்த இந்த அதிரடி திட்டத்தை வகுத்திருக்கும் இந்திய வெளியுறவு உளவு மற்றும் ராணுவ துறைக்கும் அந்த துறைகளின் தலைவரான மோடிக்கும் இந்திய குடிமகனாக ராயல் சல்யூட்
மிக நுட்பமும் தேர்ந்த அனுபவமாக இதை வடிவமைத்து செயல்படுத்துவது யார் தெரியுமா? அந்த மாவீரன் அஜித் தோவால், அவரின் கரங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆட வைத்திருக்கின்றார் மோடி, அந்த பலத்தில் சாதிக்கின்றார் தோவால்..
இந்தியா பெரும் முடிவோடு களமிறங்குகின்றது, பாகிஸ்தான் இனி பாதி கூட மிஞ்சாது..
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.