அதிரடிக்கு தயாரான இந்தியா! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான் குறி! பாகிஸ்தான் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு!

ஆப்கான் தலிபான்களின் புண்ணியத்தினால் நிறைய ஜெய்ஸ் இ முகம்மது லஸ்கர் ஐ தொய்பா தீவிரவாதிகள் ஆப்கான்சிறைகளில் இருந்து விடுதலை ஆகி இருக்கிறார்கள்.

விடுதலையான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொண்டு போய் இறக்கி இருக்கிறது பாகிஸ்தான். தீவிரவாதிகளோ இந்திய எதிர்ப்பு கோஷங்களுடன் காஷ்மீரை மீட்போம் என்று பேரணி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் காஷ்மீரில் கடுமையான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் என்பதால் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு இனி காஷ்மீரில் கடுமையான சவால்கள் காத்து இருக்கிறது.

கடந்த காலங்கள் மாதிரி இல்லாமல் காஷ்மீரில் இப்பொழுது பாகிஸ்தானால் இது வரை எதையும் சாதிக்க முடிய வில் லை .வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கிறது.

காஷ்மீரில் தீவிரவாதம் பெருக முக்கிய மான மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் தான் இது வரை இருந்து வருகிறது. இனி மேலும் இது தொடர இருக்கிறது
.
1991 ல் ஆப்கானில் இருந்து சோவியத் யூனியன்ராணுவம் விலகியதும் அது வரை ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் படைகளை விரட்ட அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஆப்கான் தலிபான்களும் அல்கொய்தா அமைப்பும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் ஒன்று சேர்ந்து லஷ்கர் இ தொய்பாவை உருவாக்கி காஷ்மீரில் உலவ விட்டார்கள்.

இப்பொழுது 2021 ல் அமெரிக்க ராணுவ ம் ஆப்கானிஸ்தானை விட்டுவிலகியதும்,தலிபான்கள் ஆதரவுடன் மீண்டும் காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஸ்இ முகம்மது தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க இருக்கிறார்கள்.

ஆனால் கடந்த காலம் மாதிரி இந்தியா இப்பொழுது இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்படியாவது கைப்பற்ற மோடி அரசு தயாராக இருக்கி றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் காஷ்மீரில் தீவிரவாதம் ஊடுறுவ நினைத்தால் அதையே முன் வைத்து இந்தியாபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றி விடும்.

சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியாவுக்கு ஒரு நியாயமான காரணம் தேவைப்படுகிறது. அதை இப்பொழுது பாகிஸ்தானே இந்தியாவுக்கு உருவாக்கி கொடுக்கிறது.

Exit mobile version