சீனாவிற்கு ஷாக் கொடுத்த இந்தியா மோடி Silent புரட்சி மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலே, ஒரு பிரபலமான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதைப் பார்த்திருப்போம், “இது Suit Boot Ki Sarkar, மோடி அரசு கார்ப்பரேட் ஆதரவு அரசு” என்றெல்லாம். அதிலும் latest trend என்னவென்றால், மோடி, ஒரு சில தொழிலதிபர்களை மட்டுமே வளர்த்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு. ஏன், வெளிப்படையாக சொன்னால், “அதானி – அம்பானி ஆதரவு அரசு” என்ற வசனம். இதற்கு, “அம்பானியை முதலில் ஊக்குவித்தது யார் தெரியுமா? அதானிக்கு முதன்முதலாக அந்த தொழிலுக்கு லைசன்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?” என பாஜக பதில் கேள்விகளை எழுப்பி, பதிலடி கொடுத்து வருகிறது.
ஒரு சில தொழிலதிபர்களை மட்டும் பாஜக ஊக்குவித்து வருகிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை. அது அரசியல். மறுபுறம், நாட்டில் Silentடாக ஒரு புரட்சி நடந்து வருகிறது. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வளர்ச்சி அது. Unicorn நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா செய்துவரும் சாதனை தான் அது. ஆம், அந்த Silent புரட்சியை Hurun அமைப்பு, தனது அறிக்கையில் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. ஒரு Start-up நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை, அதாவது, இந்திய மதிப்பில் 7960 கோடி ரூபாயை எட்டினால், அது Unicorn நிறுவனம் என்று அழைக்கப்படும். வழக்கமாக தொழில்மயமாக்கல், நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் மேற்கத்திய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், Unicorn நிறுவனங்கள் உருவாக்குவதில் உலகையே இந்தியா திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. Hurun ஆய்வறிக்கை படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் Unicorn நிறுவனங்களை உருவாக்குவதில், இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவில் புதிதாக 14 Unicorn நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
ஆனானப்பட்ட சீனாவிலோ 11 Unicorn நிறுவனங்கள் மட்டுமே உருவாகியுள்ளன. இந்தியாவிற்கு முன்பாக அமெரிக்கா மட்டுமே உள்ளது. அங்கு 138 Unicorn நிறுவனங்கள் உருவாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக Unicornகளை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 68 யூனிகான் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவை விட, அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே அதிக Unicornகளை கொண்டுள்ளன. வளர்ந்த நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல் போன்றவை கூட இந்தியாவிற்கு பின்னரே உள்ளன. இந்தியாவின் அந்த 68 யூனிகான் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது Byjus. அதன் மதிப்பு 1,75,036 கோடி ரூபாய். இது மட்டுமே யூனிகான் நிறுவனங்களின் Top-20 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நிறுவனம். அதைத்தொடர்ந்து, Swiggy, 45வது இடத்திலும், Dream11, 75வது இடத்திலும், Oyo (ஓயோ) 91வது இடத்திலும் உள்ளன. அதிக யூனிகான் நிறுவனங்களை கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில், பெங்களூரு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மட்டும் 33 யூனிகான் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ஐந்து புதிய யூனிகான் நிறுவனங்களை பெங்களூரு நகரம் உருவாக்கியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில், 176 யூனிகான் நிறுவனங்களுடன் அமேரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளது.
அதைத்தொடர்ந்து நியூயார்க், பீஜிங், ஷாங்காய், லண்டன் போன்றவை உள்ளன.இது மட்டுமல்ல இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் இந்தியர்கள் இணை நிறுவனர்களாக இருக்கக்கூடிய 56 நிறுவனங்கள், யூனிகான் நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. இதனால், இந்தியர்கள் உருவாக்கிய யூனிகான் நிறுவனங்களின் எண்ணிக்கை, 124 என்றே சொல்லலாம். இது இந்தியாவின் கணக்கில் வராது என்றாலும், இந்தியர்களின் கணக்கில் நிச்சயம் வரும். இப்படி வளர்ந்த நாடுகளாக இருக்கும் பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், பிரான்ஸ், ஜப்பான் போன்றவற்றை பின்னுக்குதள்ளி, இந்தியா அதிக அளவிலான யூனிகான் நிறுவனங்களை உருவாக்கி வருவது ஒன்றும், சாதாரண விஷயம் அல்ல. இவை ஏதோ ஒரு சில தொழிலதிபர்களால் சாத்தியமானதும் அல்ல. ஒரு சில தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கக்கூடியதும் அல்ல. .
இதற்கு, அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் முக்கிய காரணமாகும். குறிப்பாக, நாட்டில் தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது, இதுபோன்ற தொழில்களுக்கு ஊக்கமாக அமைந்தது. இதை ஏதோ, “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” எனக் கூறவில்லை. ஆதாரத்துடனேயே கூறுகிறோம். உலக வங்கி வெளியிட்ட தொழில் செய்ய ஏதுவான நாடுகளுக்கான பட்டியலில், அதாவது Ease Of Doing Business Ranking-கில், 2014ல், உலக நாடுகளில் கடைக்கோடியாக 142வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2022ல் 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கார்ப்பரேட் ஆதரவு அரசு, Suit Boot Ki Sarkar, அம்பானி ஆதரவு- அதானி ஆதரவு- சப்பானி ஆதரவு போன்ற வசனங்கள் எல்லாம் சில Retweetகளை பெறுவதற்கு வேண்டுமானால் உதவலாம். நடைமுறையில், நாட்டின் வளர்ச்சிக்கோ, குறைந்தபட்சம் நடைமுறை அரசியலுக்கோ கூட உதவாது. காரணம், மக்கள் அனைத்தையும், உணர்ந்தே உள்ளனர்…!
கட்டுரை :-அருண் -சாணக்யா.