தரையில் நீண்ட துாரம் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்ககூடிய வெடிகுண்டை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. சோதனை செய்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் தான் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வண்ணம் 5500-5800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்தியா தனது பாதுகாப்பு பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிரிகளை தாக்கும் வகையில் பல ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.போர் விமானத்தில் இருந்து ஏவி, தரையில் உள்ள நீண்ட துார இலக்கை துல்லியமாக சென்று தாக்ககூடிய வெடிகுண்டுச் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
தரையில் நீண்ட துாரம் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்ககூடிய வெடிகுண்டை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெடிகுண்டு, ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள ராணுவ சோதனை தளத்தில் இருந்து நேற்று பரிசோதிக்கப்பட்டது. இந்திய விமானப் படையின் போர் விமானத்தில் இருந்து போடப்பட்ட வெடிகுண்டு, தரையில் நீண்ட துார இலக்கை துல்லியமாக சென்று தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானத்தை செயல் இழக்க செய்யும் ‘அப்யாஸ்’ என்ற நவீன தொழில்நுட்பமும் ஒடிசா கடற்கரை பகுதியில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தற்போது எல்லையில் ட்ரோன்களை வைத்து தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை தருகிறது. மேலும் எல்லை ட்ரான்கள் எல்லை தாண்டி இந்தியாவில் எல்லைக்குள் பறக்கிறது. ட்ரான் மூலம் குண்டு வீசும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானத்தை செயல் இழக்க செய்யும் ‘அப்யாஸ்’ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்ற நவீன தொழில்நுட்பமும் ஒடிசா கடற்கரை பகுதியில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நிலப்பரப்பில் இருந்து மட்டுமின்றி கடலில் கப்பலில் இருந்தும் இந்த அக்னி 5 ராக்கெட்டை ஏவ முடியும்.இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணை ஆகும்.தற்போது இருக்கும் அக்னி 5 ஏவுகணை மூலம் சீனாவின் எந்த எல்லை பகுதியையும், எந்த நகரத்தையும் தாக்க முடியும். இதன் 8ம் கட்ட சோதனை இப்போது செய்யப்பட்டுள்ளதால் அண்டை நாடுகள் கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது.