இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிப்பது இஸ்ரேல் ரணுவத்தின் ஸ்டைல். யூதர்களின் 2000ம் ஆண்டு கனவான இஸ்ரேல் நாடு 1948ம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி உதயமான மறு நாளே இன்னும் சரியாக கூற வேண்டும் என்றால் அன்றைய இரவே போரை சந்தித்த நாடு. உலக வரலாற்றிலேயே ஒரு நாடு பிறந்த அன்றே போரை சந்தித்து இருக்கிறதுஎன்றால் அது இஸ்ரேலாகத் தான் இருக்க முடியும்.அதுவும் எகிப்து ஜோர்டன் ஈராக் சிரியா லெபனான் சவுதி அரேபியா ஏமன் என்று 7 அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து இஸ்ரேலை தாக்க 7 நாடுகளின் படைகளையும் இஸ்ரேல் ராணுவம் எதி ர்கொண்டு முறியடித்து இஸ்ரேல் உருவா ன அன்றே உருவான பாலஸ்தீனம் என் கிற நாட்டைஆக்கிரமித்தன் மூலமாக இ ஸ்ரேலின் வீரத்தை அறிந்து கொள்ளலாம் அந்த ஒரே ஒரு போர் மட்டுமே இஸ்ரேலிய வரலாற்றில் ஒரே ஒரு வருடம் நீடித்த போர்.

அப்புறம் நடந்த இஸ்ரேல் அரபு போர்களை முடிக்க ஒரு மாதம் கூட இஸ்ரேல் எடுத்த கொண்டதில்லை.ஒரு சில வாரங்களிலேயே அரபுபடைகளை அலற வைத்து நையப்புடைத்து அடித்து துவைத்து போட்டு விடும் இஸ்ரேல் ராணுவம்.

போரில் டிபன்ஸ் அபென்ஸ் என்று இர ண்டு முறைகள் உண்டு. ஒரு நாடு இன்னொரு நாட்டை தேடிச் சென்று அடிக்கஆரம்பிக்கிறது என்றால் அந்த நாடு தன்னை முழுமையாக பாதுகாப்பாக வைத்து இருக்கிறது என்றே அர்த்தம்.சுற்றி உள்ள எந்த அரபு நாடும் நெருங்க முடியாத படி இரும்பு கோட்டையாக தன்னை மாற்றிக் கொண்ட இஸ்ரேல் எதிரிகளை அவர்களின் இடம் தேடிச் சென்று அடித்துக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது இந்தியாவும் மோடி ஆட்சியில் இஸ்ரேல் மாதிரியே உருவாகி கொண்டு வருகிறது என்றே கூறலாம்.
.
இந்திய சீன எல்லையில் மோதல் முற்றி வரும் நிலையில் இந்தியப் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீனக்கடல்பகுதி யில் முகாம் இட்டு இருப்பதன் மூலமாக இந்தியா எதற்கும் தயார் என்று போர் வரும் முன் தாக்க தயார் என்று சீனாவுக்கு அறிவித்து இருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவின் உள்ளே நுழைந்து அடித்துக் கொண்டு இருந்த சீ னாவை இப்பொழுது இந்திய ராணுவம்சீன எல்லைக்குள் நுழைந்து எதிர் கொ ள்ள தயாராக இருக்கும் பொழுதே நம்ம எல்லைகளை பாதுகாப்பு செய்து இரு ந்தால் தான் இது சாத்தியமாகும் என்று புரிந்து கொள்ளலாம்.சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூ ழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல்பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போர் வல்லுனர்கள் கூறிவருகிறார்கள்.

ஒரு காலத்தில் இந்தியப்பெருங்கடலில் சீனப்போர் கப்பல்கள் முகாம் இட்டு இருந்த நிலை மாறி இப்
பொழுது இந்திய போர் கப்பல்கள் சீனாவின் தென் சீனக்கடலில் நிற்கிறது என்றால் அதற்கு மோடி எவ்வளவு உழைத்து இருப்பார் என்று யோசித்து பாருங்கள்.ஒரு காலத்தில் இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சீனா இந்தியாவை விரைந்து தாக்கும் வகையில் பல நாடு
களின் துறைமுகங்களை மேம்படுத்து தல் என்கிற பெயரில் தன்னுடைய கடற்ப டை தளமாக உருவாக்கி வைத்து இருந்தது.

எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இருந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் சபாங் துறைமுகம்.இந்தோனேசியாவின்
மிக முக்கியமான இந்த துறைமுகம் தான் இந்தியாவை இந்தியப் பெருங்கடலில் காத்து நிற்கும் அந்தமானை அடை காக்கும் பருந்து என்றே கூறலாம்.

இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன்படுத்திக்கொ ள்ள இந்தோனேசியாவிடம் மோடி ஒப்பு தல் பெற்றுள்ளதன் மூலமாக இந்தியப்பெருங்கடலில் இந்தியாவை காத்து நிற்கும் அந்தமானையே காக்கும் கேடய மாக சபாங் துறைமுகம் இருக்கிறது.

மூன்று புறமும் கடல் சூழ்ந்துள்ள இந்தி யாவுக்கு கடல் பாதுகாப்பை அளிக்கும் ஒரு மிகப்பெரிய ராணுவ டிவிசனை இந்திய ராணுவம் அந்தமான்தீவுகளில் தான் வைத்துள்ளது.இது எப்பொழுது
உருவானது என்றால் 2001 வாஜ்பாய் ஆட்சியின்பொழுது உருவானது சுமார் 2 பில்லியன் டாலர் ,மதிப்பில் அதா வது 13 ஆயிரம் கோடி ரூபாய் செல வில் அப்போதைய பிஜேபி அரசுஇந்தியபெரு ங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளில் இப்பொழுது உள்ள ராணுவ டிவிசனை உருவாக்கியது.

இங்கு விமானப்படை தரைப்படை கடற்படை என்று முப்படைகளும் இருக்கிறது. குறைந்தது 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அந்தமானில் உள்ள ராணுவ டிவிசனில் இருக்கிறார்கள்.இவர்களுடைய முக்கிய நோக்கமே தென் சீனக்கடலில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெ ருங்கடலில் நுழையும் கப்பல்களை வேடி க்கை பார்த்துக்கொண்டு இருப்பது தான்அந்தமானில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்தியாவை ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.ஏனென்றால் 2004 டிசம்பரில் சுனாமி இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வை தாக்கியபொழுது அதில் மிகவும் பா திக்கப்பட்ட இந்திய பகுதி அந்தமான் தா ன்..அப்பொழுது பல வெளிநாடுகள் அந்தமானை நோக்கி உதவ ஓடிவந்தன.

ஆனால் இந்தியாவோ பதறிக்கொண்டு நோ தேங்க்ஸ் பிரதர்ஸ்இதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரிக் கையாக ஜகா வாங்கியது.இதை பார்த்து உலக மீடியாக்கள் இந்தியா அந்தமானில் அணு ஆயுதங்களுடன் கூ டியமிகப்பெ ரிய படைத்தளம் வைத்துள்ளது இது உலகின் பார்வையில் பட்டுவிடக்கூடாது
என்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு அந்தமானில் யாரையும் நுழைய விடவில்லை என்று எழுதி தள்ளின.
எது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் .இந்தியாவின் மிகப்பெரிய அணு ஆயுதங்களுடன் கூடிய படைப்பிரிவு அந்தமானில் உள்ளது.உருவாக்கியது நம்முடைய வாஜ்பாய் அரசு என்கிற அளவில் நாம் மார் தட்டிக்கொள்வோம்.

இந்தியாவின் அந்தமான்படைப்பிரிவை வாஜ்பாய் அரசு பெரியளவில் உருவா க்கியதற்கு முக்கிய காரணமே 1994 ல் சீனா கோகோ தீவுகளை லீசுக்கு எடுத்த தால் தான் உண்டானது.அந்தமானுக்கு வடக்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொ லைவில் இருக்கும் மியான்ம ர் நாட்டிற்கு சொந்தமான கோகோ தீவை சீனா தன் கஸ்டடியில்எடுத்துக்கொண்டு அங்கு தன்னுடைய கடற்படைகப்பல்க ளை வைத்து இருக்கிறது.இந்தகோகோ தீவு இந்திய பாதுகாப்புக்கு உள்ள மிக ப்பெரிய அச்சுறுத்தல் உள்ள பகுதியாகும்
ஏனெனில் வங்காள விரிகுடாவில் இரு க்கும் இந்த கோகோ தீவில் இருந்து இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களான சென்னை விசாகப்பட்டினம் கொல்க த்தா துறைமுகங்களைசீன கடறபடையி னால் தாக்க முடியும்
.
இதற்கு பதிலடியாகத்தான் வாஜ்பாய் அரசு 2001 ல் அந்தமானில் மிகப்பெரிய ராணுவ கேந்திரத்தை அமைத்தது. சீன இந்தியாவை உளவு பார்க்க கோகோ தீவில் ஒரு படையை உருவாக்கியுள்ளது அந்த கோகோ தீவை மியான்மருக்கு கொடுத்ததே நேரு தான் என்று வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தஜார்ஜ் பெர்னாண்டஸ் கர்ஜிக்க காங்கிரஸ் கூடாரம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடம் 1998 ல் மல்லுக்கு நின்றதை மறந்து விடக்கூடாது.உண்மையிலேயே இந்தியா சுதந்திரம்அடைந்த பிறகு 1948 ல் சுதந்திரம் வா ங்கிய பர்மாவு க்கு நேரு நினைத்திரு ந்தால் கோகோ தீவுகளை பர்மாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து இருக்கலாம்.என்பதே உண்மையாகும்.

2001 ல் பிஜேபி ஆட்சியில் இந்தியா அந்தமானில் மிகப்பெரிய ராணுவ பிரிவைஉ ருவாக்கியது என்றால் 2011 ல் காங்கிரஸ் ஆட்சியில் கோகோ தீவில் சீனா விமான தளத்தை உருவாக்கி அந்தமானில்உள்ள இந்திய ராணுவ டிவிசனுக்கு இதோ பாருங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம் என்று கெத்து காட்டி வந்தது.சொன்னால் நம்ப மாட்டீர்கள்..2014 ல் மே இறுதியில்மோடி பதவி ஏற்றார்.ஜூன் ஆரம்பத்தில் அந்தமானுக்கும் கோகோ தீவுக்கும் இடையில் இருக்கும் இந்திய தீவான நார்கண்டம் தீவில் இந்தியா மிகப்பெரிய ராடார் ஸ்டேசனை அமைக்க மோடி அரசு உத்தர விட்டது என்றால் இ ந்தியாவின் கடல் பாதுகாப்பில் மோடி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்படி கோகோ தீவில் இருந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனா கடற்படைக்கு செக் வைக்க வேண்டுமென்றால் அந்தமானுக்கு முன்பே சீன கப்ப ல்களை இந்தியா கண்காணிக்க வேண்டும் இதற்கு மோடி தேர்ந்தெடுத்த இடம் தான் இந்தோனேசியாவின் சபாங்துறைமுகம்.இந்த துறைமுகம் அந்தமானுக்கு தெ ன் கிழக்கில் 150 கிலோமீட்டர் தொலை வில் மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது.
இது தாங்க சபாங் துறைமுகத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயின்ட்..சீனாவின் தென் சீனக்கடலில் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவின் மலா க்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்க டலில் நுழைந்து சீனாவில் உற்பத்தியா கும் 80% பொருட்களை மேற்காசிய நாடு கள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது.

சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல் பரப்பிலேயே அதிக அளவில் நடைபெறும்.போரின் பொழுது சீனாவின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் இந்தியா செய்யும் முதல் காரியம் என்ன வென்றால் இந்தியப்.பெருங்கடல் பகுதி யில் சென்று கொண்டி ரு க்கும் சீன கப்ப ல்களை தான் குறி வைக்கும்.

அதுவும் மலாக்கா நீரிணைப்பை தான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபி க் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபக ற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சும த்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கிலோமீட்டர் நீளம் உடையது மலாக்காநீரிணைப்பு.இந்த நீரிணைப்பு தான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல் லப்படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங் கட லை யும் இணைப்பதாக அமைந் துள்ளது.

இந்த மலாக்கா வழியே ஆண்டு தோறும் 80,000 க்கும் மேறபட்ட கப்பல்கள் பயணி ப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நாளை க்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் மலா க்கா நீரினைப்பின் வழியாக வந்து போய் கொண்டிருக்கிறது.அதனால இந்தியாவுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கியமான இடம்.40 கி லோ மீட்டர் அகலமே கொண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீனப்போர்கப்பல்க ள் இந்தியப் பெருங்கடலில் நுழையும் முன்பே சபாங் துறைமுகத்தில் காத்திரு க்கும் இந்திய வான்படை கடற்படைகளா ல் கண்காணிக்கப்பட்டு ரவுண்ட் கட்டப்படும்.

இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரி ணைப்பின் வழியாகவும் இந்திய பெரு ங்க டலுக்குள் சீனாவின் போர் க்கப்பல் கள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியு ம்.இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரிணைப்புக்கு நேர் கீழே இந்தோனேசி யாவின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் அமெ ரிக்கா தடுத்து நிற்கிறது.ஆஸ்திரேலியா நாட்டை சார்ந்த கோகோஸ் தீவுகளில் அ மெரிக் காவின் அதிநவீன வான் படை மற்றும் கடற்படை உள்ளது.இந்த தீவுகளி ல் இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா கடற்படையினர் பொழுது போக அடிக்கடி போர் பயிற்சிகள் மேற் கொள்வது வழக்க ம்.இவர்களை கடந்து சீனப்போர் கப்பல்க ள் இந்தியப்பெருங்கடலில் நுழைந்து இந்தியாவை தாக்கிவிடுமா?

பாருங்கள் சீனக்கப்பல்கள் இந்தியாவை தாக்க வருகின்ற வழிகள் இரண்டே இரண்டு தான்.ஒன்று மலாக்கா நீரிணைப்பு இன்னொன்று சுந்தா நீரிணைப்பு. இதில் மலாக்கா வழியாக வரும் கப்பல்கள் அந்தமானில் உள்ள இந்திய முப்படைக ளை தாண்டித்தான் வர முடியும்.அதேமாதிரி சுந்தா நீரிணைப்பின் வழி யாக இந்தியப் பெருங்கடலு க்குள் நுழை யும் சீனப்போர்கப்பல்கள் அந்த மான் தீவுகளுக்கு நேர் கீழாக உள்ள ஆஸ்திரே லியாவின் கோகோஸ் தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்படையை தாண்டித்தான் இந்தியாவை தாக்க முடியும்.

இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா? ஆனால் இந்திய அமெரிக்க கடற்படைகள் நினைத்தால் சீனாவின் சரக்கு கப்ப ல்களை இந்திய பெருங்கடலில் மூழ்கடித் து விட முடியும். இந்தியப்பெருங்கடல் எதற்கு? இந்தியாவும் அமெரிக்காவும் நி னைத்தால் அமைதிக் கடலான பசிபிக் பெருங்கடலிலேயே சீனாவுக்கு பாடை கட்ட முடியும்ஆனால் அப்படி வந்தாலும் சபாங் துறை முகத்தில் இருந்து இந்திய கடற்படை சீன கடற்படையை எதிர்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு க்கு மிக முக்கியமான துறைமுகம் தான்
சபாங்.அதாவது இந்தியாவை பாதுகாக்கும் அந்தமான ராணுவ டிவிசனையே பாதுக்காக்கும் இடத்தில் இருக்கிறதுசபாங் துறைமுகம்.

இப்படி இந்தியாவை விட வலிமையான சீன கடற்படையிடம் இருந்து இந்தியா வை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுக ளை யும் செய்து முடித்த பிறகே இந்திய போர் கப்பல்களை தென் சீனக்கடலி ல் நுழைந்து சீன கடற்படையை எதிர் கொள்ள இந்தியா அனுப்பி இருப்பதன் மூலமாக மோடி ஆட்சியில் இன்னொரு இஸ் ரேலாக இந்தியா மாறி வருகிறது என்றே கூறலாம்.

Exit mobile version