Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

Oredesam by Oredesam
October 8, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !
FacebookTwitterWhatsappTelegram

நாம் வாழும் இந்த உலகில் ஆகச் சிறந்த பிரதானமான கண்டுபிடிப்பு என சக்கரத்தினை சொல்வர். கிட்டத்தட்ட அதற்கு சமமான ஒரு கண்டுப்பிடிப்பு உண்டு என்றால் அது வெகு நிச்சயமாக குறை கடத்தியை தாராளமாக சொல்லாம். அதாவது செமி கண்டெக்டார்ஸ்.

இன்றைய உலகின் உயிர் நாடி அல்லது இன்றைய உலக இயக்கத்தின் அடிநாதமாக இருப்பது இந்த ஒரு பொருள் தான்.சீனா உலக வல்லரசு நாடுகளை புறங்கையால் தள்ளி இன்று முன்னேறி இருப்பதற்கும் இந்த ஒரு பொருளின் உற்பத்தியும் மிக முக்கியமானதொரு காரணம் கூட.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

ஆனால் உலகின் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதி தன்வசம் வைத்திருக்கும் நாடு சீனா அல்ல….அது தைவான். தைவான் தான் கண்டடைந்த செமி கண்டெக்டார் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு….. சரியான சொன்னால் சீனாவின் பிரத்தியேக பாணியிலான பிரதி பண்ணும் வித்தை மூலம் தனதாக்கிக் கொண்டது.உலகின் மிண்ணனு சாதனங்களில் இருந்து விண்வெளி பயணம் வரை இந்த ஒரு பொருள் தான் ஆதார சுருதி.


இதற்கு உதாரணம் தான் இன்று நாம் பயன்படுத்தும் செல்போன்களில் உயர் தரம் வாய்ந்த சிப் செட் இவை இன்றைய தேதியில் சீனா தான் கோலோச்சி வருகிறது.ஸ்நாப் டிராகன் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்கிற நிலை தான் தற்போது வரை இருக்கிறது. இதன் தரம் தான் செல்போனில் விலையை தீர்மானிக்கிறது.

கிட்டத்தட்ட இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இதில் ஈடுபடுகிறார்கள் என்று மேற்கு உலக நாடுகள் சொல்லி வந்த நிலையில் இந்தியா தன்னிச்சையாக தனது சுய முயற்சியால் கொரானா நோய் தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதன் தொழில்நுட்ப வல்லமை கொண்டே சாதித்தது.

இது முதல் படி என்றால் தற்போது இந்தியா தைவானுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் செமி கண்டெக்டார்ஸை உருவாக்க போகிறார்கள். அதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து உற்பத்தி நிலையை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள் நம்மவர்கள். இது குறித்த காலத்தில் எல்லாம் சரியாக நடந்தால் அடுத்து வரும் பதினைந்து ஆண்டுகள் நாம் தான் இந்த உலகம்.

இவை வெறும் ஆரம்பம் மட்டுமே என்பது தான் இதில் உள்ள கூடுதல் சிறப்பு தகவல்.ஏனெனில் இன்றைய தேதியில் உலகம் மின்சார வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரு சக்கர வாகனம் முதற் கொண்டு கனரக வாகனங்கள் வரை மின்சார வாகனங்களாக மாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு புவி வெப்பமடைதல் என்பதும் ஒரு காரணம்.இந்த தளத்தை மிகச் சரியான விதத்தில் பயன் படுத்த இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதன் ஆரம்ப புள்ளி இந்த செமி கண்டெக்டார் உற்பத்தி.பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.. சிப் இல்லாருக்கு எவ்வுலகமும் இல்லை என்பது தான் இனி வரும் நாட்களில் இருக்கப் போகும் சொல்லாடல்.

இதில் இந்தியா தற்போது இரண்டு படிகளில் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தைவான் மற்றும் மேற்கு உலக நாடுகள் நான்கு படிகளில் இருக்கிறது. சீனாவோ ஆறாவது படிக்கட்டில் நின்று கொண்டு அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்தியா இன்னும் இரண்டு ஆண்டுகளில் இத்துறையில் சீனாவை விஞ்ச திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளில் இறங்கி இருக்கிறார்கள் என்பது இதில் உள்ள சாகசம்.

மேற்கத்திய நாடுகளை தாண்டி சீனா முன்னிலை வகிக்கும் காரணம் ஆள் பலம்……. அதனால் மிக குறைந்த உற்பத்தி செலவு. அடுத்ததாக தண்ணீர். கொஞ்சம் நஞ்சம் அல்ல.இப்படி புரிந்து கொள்ளலாம் நம் நகக்கண் அளவில் உள்ள சிப் செட் தயாரிக்க சுமார் 50 கேலன் தண்ணீர்தேவை என்பதாக ஒரு கணக்கு உண்டு.

இந்த அதீதமான சுத்திகரிப்பு செய்யும் காரணங்களுக்காக தான் மேற்கு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து இந்த பொருளை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த வேலைக்காக தான். தனது அதீதமான இந்த தண்ணீர் தேவைக்காகத்தான் சீனா திபெத்திய பிராந்தியத்தில் வலுவாக கால் ஊன்றி நிற்கிறது. மிகப் பெரிய அணைக்கட்டுகளை ஏராளமான எண்ணிக்கையில் கட்டிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இந்தியா இந்த விஷயத்தை. அதாவது உற்பத்தி செய்யும் முறைமையை மாற்றுருவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள். மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் அளவில் அதன் தொழில்நுட்ப பொறிமுறைகளை மாற்றம் செய்து கொண்டு இருப்பதாகவும் கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று இந்தியா வேறு மிக முக்கியமான ஒரு தொழில்நுட்ப பண்புகளை ஆராய்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.. கனிம உலோகவியலில் அது மிகப் பெரிய தாக்கத்தை வரவிருக்கும் நாட்களில் ஏற்படுத்தும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஏற்கனவே வெவ்வேறான தளத்தில் வைத்து அதனை சாதாரண அறிவிப்பு போல் சொல்லி இருக்கிறார்கள்.ஒன்று.

இனி லித்தியம் அல்லது லித்தியம் பாஸ்பரஸ் ( lithium ferrous phosphate) பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியத்தை மூலப்பொருட்களை கொண்டு பவுடர் பேட்டரிகளை நமது நாட்டில் கண்டுபிடித்துள்ளனர்.இது தற்போது பயன்பாட்டில் உள்ள அதி நவீன பேட்டரிகளை காட்டிலும் அதிகமான கொள்ளவும் நீண்ட கால சேமிப்பாகவும் மிகக் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வகையில் இருக்கிறது என்கிறார்கள். இது சர்வதேச அளவில் ஒரு மைல் கல் சாதனையாகும்.

பதிவு : ஸ்ரீராம்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சித்ரா பவுணர்மி என்ன சிறப்பு

April 26, 2021
1 கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசு புதுதிட்டம்….

பிரதமர் மோடி அரசின் உடான் திட்டத்தில் உள்நாட்டு பயணம் புதிய உச்சம்

November 22, 2024
ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது-பிரதமர் மோடி உரை.

ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது-பிரதமர் மோடி உரை.

June 21, 2022

விழுப்புரம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் இரத்ததான முகாம்.

September 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x