நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
புனேயில் இன்று கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தில் நடைபெற்ற 70ஆவது ஆண்டு கருத்தரங்கில் உரையாற்றிய திரு சவுகான், ஆராய்ச்சியாளர்களின் பணி ஆய்வகத்துடன் மட்டும் நின்றுவிடாமல், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் மிகவும் பழமையானது. வேளாண் துறையும் இதில் இணைந்துள்ளது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதி,இந்தியா வழிநடத்தி வருவதாக அவர் கூறினார்.
நதிகள் இணைப்புத் திட்டத்தை 2024-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், சில பகுதிகள் வறட்சி போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதாகவும் திரு சௌகான் கூறினார். இத்தகைய சவால்களை சமாளிக்கும் வகையில், சிறப்பு நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். அதிக மழை பெறும் பகுதிகள் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் பகுதிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையும். குறைந்த நீரில் அதிக பாசனம் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றும் வேளாண் அமைச்சர் கூறினார். வேளாண் துறையை ஊக்குவிக்க உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு சவுகான், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 1.94 மெட்ரிக் டன் மானியம் வழங்கியதாக கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















