இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வகை ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்த தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்தியாவின் Mig 29 & Sukhoi-30MKI போர் விமானங்கள் இந்தியாவின் பூஜி மற்றும் அதம்பூர் விமான படைத்தளங்களில் இருந்து கிளம்பி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஒன்றும் மற்றவை பகவல்பூருக்கும் சென்று உள்ளன மொத்தம் இந்தியாவின் 3 போர் விமானங்கள் பாகிஸ்தானின் எல்லை உள்ளே சென்று இந்த அதிரடி ஆப்ரேஷனில் ஈடுபட்டன.
இந்த நிலையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துள்ளது , மேலும் ஏதாவது நடக்கும் என்று பாகிஸ்தான் கராச்சியில் அவசர நிலையை பிறப்பித்து மின்சாரத்தை நிறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின், நீளம் பள்ளத்தாக்கிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது இந்திய இராணுவத்தின் ஆக்ரோஷ தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள Samhani, Naali மற்றும் Goi பகுதியில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் 10 முகாம்கள் சுக்கு நூறாக்கப்பட்டன.மேலும் பாகிஸ்தானின் ஒரு பீரங்கி ஒன்றை தாக்கி அழித்தது இந்திய இராணுவம்..
நேற்று நடந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, பதிலடியாக இந்தியாவும் தற்போது துல்லியத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அதிரடித் தாக்குதலில் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.