பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி சிஇஓ பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் அப்பொறுப்பை ஏற்கவுள்ளார். லகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக (CEO) ஜாக் டோர்சி செயல்பட்டுவந்தார்.
இதற்கிடையில், ட்விட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓவாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க டெக் நிறுவனம் ஒன்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்படுவது இது முதல்முறையல்ல.
ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராகத் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தில் அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயணன் ஆகியோர் இருந்துவரும் நிலையில், தற்போது ட்விட்டரின் சிஇஓவாக பராக் அகர்வால் பொறுப்பேற்க இருப்பது உலகளவில் இந்தியருக்குப் பெருமையளிப்பதாக உள்ளது.
இந்த நியமனம் குறித்து டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மாஸ்க் திறமையுள்ள இந்தியர்களால் / இந்திய திறமைகளால் …அமெரிக்கா பெரிதும் பலனடைகிறதுஎன்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக செயற்பாட்டளர் பானு கோம்ஸ் கூறுகையில் :
இலான் மாஸ்க் கூறுவது இந்தியாவின் திறமைகளால் அமெரிக்கா’வே’ பெரிதும் பலனடைகிறது என்று புரிந்து கொள்ளலாம்.சரியாகத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறார்.உலகப் பெரும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்களால்…இந்திய CEO-க்களால் இந்தியா அடைந்த நன்மை என்ன ?? என்கிற கேள்விக்கான பதிலாக…இலான் மஸ்க் -ன் இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.
உலக அளவில் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களால் இந்தியா அடைந்திருக்கும் நன்மைகள் என்னென்ன? என்றொரு பட்டியல் தேவைப்படுகிறது. அப்படியானதொரு பட்டியல் இருப்பின்…இத்தகைய தலைமைகளை கொண்டாட இயலும்.
அதுவரை….ஜாக் டார்ஸி -க்கு பதில் பராக் அகர்வால் . அவ்வளவுதான். ஏனெனில்…இந்தியாவில் இந்த ட்விட்டர் நிகழ்த்தி இருக்கும் வரம்பு தாண்டிய அரசியல் அத்தகையது ! [அமெரிக்கா வாழ் இந்தியர்கள் & அவர்களால் இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள் என்பது முற்றிலுமாக வேறு. குழப்பிக் கொள்ள தேவையில்லை.]