இந்தியா சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனை நடந்து வருகிறது கடந்த வாரம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் நிகழ்ந்தது . இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் சீன தரப்பிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. ஆனால், சீனா உண்மையான இறப்பு எண்ணிக்கையை தற்போது வரை வெளியிடவில்லை. இது தொடர்பாக, மழுப்பலாக கூறியுள்ள சீனா, இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், அதனால் தான் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றும் கூறியது.
மோதல் சம்பவத்திற்கு பிறகு, சீன இராணுவம் தனது பலத்தை காட்டுவதற்காக சீன இராணுவம் அனைத்திற்கும் தயாராக உள்ளது பலமான ராணுவம் என்பதை நிரூபிக்க சீன பத்திரிக்கையான க்ளோபல் டைம்ஸ் (Global Times) முயற்சி செய்து வருகிறது. ஆனால் சீனா எப்போதும் வாய் சவடால் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து மூக்குடைந்தது!
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், சீன இராணுவத்தின், அதாவது பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் (PLA) திறனை எடுத்து காட்டும் வீடியோவை பகிர்ந்து கொண்டது. இதனால், சீனாவிற்கு மூக்குடைந்தது தான் மிச்சம். அந்த வீடியோவிற்கு பதிலடியாக, இந்திய தரப்பில் Indo-Tibetan Border Police (ITBP) ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்தது. இதை பார்த்த சீனர்கள், நிச்சயம் இந்தியாவின் வலிமையை உணர்ந்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மிகவும் வைரலாகியது
சீன பத்திரிக்கை போஸ்ட் செய்த வீடியோவில், சீன படையினர், கண்களை கட்டிக் கொண்டு, 99 விநாடிகளில் ரைஃபில் மற்றும் பிஸ்டலை அஸம்பிள் செய்தனர். இதற்கு பதிலடியாக, ITBP வெளியிட்ட வீடியோவில், இந்திய வீரர்கள் வெறும் 26 விநாடிகளில், முதலில் ரைஃபிள்களை டீ-சஸம்பிள் செய்து விட்டு பின்னர் அஸம்பிள் செய்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதை அனைத்தையும் அவர்கள் ஒரே கைகளால் செய்கின்றனர்.
சீனாவில் அவர்கள் ஊடகங்கள் அரசின் பக்கம் இந்திய ஊடகங்களோ சீனாவின் பக்கம் முக்கியமாக தமிழக ஊடகங்கள் சீனாவின் கைக்கூலிகளாகவே செயல்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நம் தமிழ் ஊடகங்களுக்கு தெரியாது.