லடாக் பகுதியில் மாஸ் காட்டும் இந்திய படைகள் அஞ்சி நடுங்கும் சீனா! இந்தியாவின் வேற லெவல் மூவ்!

navy OREDESAM

சீனாவுக்கு சிம்மசொப்பனாகவே காட்சி அளிக்க தொடங்கிவிட்டது இந்தியா. அதன் ஆக சிறந்த ராஜதந்திரத்தாலும் தேர்ந்த காய் நகர்த்தலாலும் உலக நாடுகள் பலவற்றில் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது.சமீபத்திய நாட்களில் சீனாவின் பொருளாதார சுணுக்கங்களுக்கு இயற்கை பேரிடர் ஒரு
காரணமாக இருந்தாலும் இந்தியா சுளுக்கெடுத்த கிடுக்குப்பிடி நடவடிக்கைகளால் மூலம் சீனா பரிதவிக்கவே ஆரம்பித்து இருக்கிறது.இந்தியாவுடனான கல்வான் மோதலுக்கு பிறகு சீனா உலகெங்கும் கட்டமைத்து வைத்திருந்த வர்த்தக வல்லரசு பிம்பம் சல்லி சல்லியாய் நொருங்கி இருக்கிறது.

பிரதமர் மோடி எடுத்த சாமர்த்தியமான நகர்வுகளின் அர்த்தம் மற்றும் அதன் தீர்க்கமான முடிவுகளுக்கும் தற்போது தான் உலகத்துவர் பலருக்கும் புரிய ஆரம்பித்து ஆடிப்போய் இருக்கிறார்கள். சீனா கதி கலங்கி நிற்கிறது.உலகின் அதி உயரமான மலைத்தொடரான இமயமலையில் நடந்த இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் அதன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு இந்திய மரைன் கமண்டோக்களை களம் இறக்கி அதிரடித்தது இந்தியா.இது உலகத்தவரை மிரள செய்த யுக்தி.

அதாவது கடற் படை வீரர்களின் பிரிவில் ஒன்றை நிலத்தில் அதுவும் மலைத்தொடரில் உள்ள இடங்களில் பணியமர்த்தியது இந்திய ராணுவம்.இது என்ன மாதிரியான படை நடத்தும் வியூகம் என பலருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.அதன் அர்த்தம் தற்போது தான் பலருக்கும் புரிய ஆரம்பித்து அதிர்ச்சியில் மிரள செய்து இருக்கிறது இந்தியா.

சீனா எப்படியும் நிலத்தில் முதலில் போரை தொடங்காது.அது போலவே சமாதானம் என்பதும் அங்கு அவர்கள் தேசத்தில் எடுபடாது என்பது உலகத்தவருக்கு மாவோ எடுத்த பாலப்பாடம். எப்பொழுது எல்லாம் சீனாவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் அது எங்கேனும் எல்லைகருகில் உள்ள நாட்டுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுயிருக்கும் ஒரு நாடு அது.

சிறிய சமாளிப்பு என்றால் மங்கோலியா பக்கமும்.கொஞ்சம் நடுவாந்திரமான பிரச்சினையை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென்கொரியா பக்கமும்.முற்று முழுதான கவனத்தை திசை திருப்ப இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் என ரகம் வாரியாக பிரித்து வைத்து கொண்டு ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நாடு அது.

மத்தியில் மோடி அரசு பதவியேற்றத்தும் சீனா பம்மாத்து வேலைகளை செய்ய பார்த்த சீனாவை 2016 களிலேயே நூல் பிடித்துவிட்டது இந்தியா.எவ்வளவு தூரம் சீனாவின் கை இங்கு இந்தியாவில் நீண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் மோடி அரசு சீனாவின் எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர நீண்ட கால திட்டமிடல் ஒன்றை செய்ய ஆரம்பித்தனர்.

எப்படியும் இந்திய சீன எல்லையில் ஒரு மோதல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதை கண்டுக்கொண்ட நம் மத்திய அரசு அதனை கண்டும் காணாமல் எல்லையில் பிரச்சினை செய்த பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவது போல் பாவ்லா பண்ணிக் கொண்டு சீன எல்லைக்கும் சேர்த்தே பாதுகாப்பு முறைமைகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆயுதங்களையும் வேக வேகமாக சேகரிக்க ஆரம்பித்தனர். இந்திய ராணுவத்தினரை பயிற்சி கொடுத்து எல்லையில் ஆயத்தம் செய்தனர்.

அதனால்தான் மிக எளிதாக இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் நம் ராணுவத்தினரின் கை ஓங்கியது. மோதல் என்னவோ 2019 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. ஆனால் வியூகம் 2016ல் தொடங்கியது.இது தற்போதைக்கு முற்று பெறாது என்பதை புரிந்து கொண்ட இந்திய அரசு தனது அடுத்த கட்ட நகர்வுகளை நடவடிக்கைகளை அமைத்து கொண்டது.

தரை வான் கடல் முந்திரலு பயிற்சி பெற்ற சீல் வீரர்களின் பயிற்சியை காட்டிலும் கூடுதலான பயிற்சி பெற்று தேர்ந்த வீரர்கள் உண்டு. அவர்களுக்கு மார்கோஸ் என்று பெயர். மரைன் கமண்டோ என்பதை தான் மார்கோஸ் என்கிறார்கள். அதாவது நம் இந்திய மரைன் கமண்டோ வீரர்களை தான் மார்கோஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

உலக அளவில் ராணுவ வீரர்கள் பெரும்பாலானவர்களின் கனவு நம் தேசத்தின் பாராமிலிட்டரியில் பயிற்சி பெற வேண்டும் என்பது. காரணம் அவ்வளவு கடினமான பயிற்சிகளை கொண்டதாக அது சிறந்த விளங்க காரணமாக இருந்து வருகிறது. அந்த பயிற்சி முடிவில் 36 மணிநேரத்தில் ஒரு பகல் இரண்டு இரவு பொழுதில் இமயமலையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தன்னந்தனியாக கடந்து வர வேண்டும்.
அப்படி அதில் தேர்ந்த அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே பிரத்தியேக பாணியிலான பயிற்சி கொடுப்பது தான் இந்த மார்கோஸ்.

ஐந்நூறு பேர் வரை கொண்ட சீன ராணுவ வீரர்களை கூட இவர்களில் இருவர் மாத்திரமே சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இதுவும் நடந்த ஒன்று தான். லடாக் பகுதியில் உள்ள பாங்காங்-ஸோ ஏரியில் வைத்து சீனா ராணுவ வீரர்களை சல்லடையால் சலித்து எடுத்து இருக்கிறார்கள் நம்முடைய இந்த மார்கோஸ் வீரர்கள்.

இந்த பாங்காங்-ஸோ ஏரியில் மூன்றில் இரண்டு பங்கு சீன வசம் இருந்து வருகிறது. ஒரு பக்கம் அல்லது ஒரு கரை மாத்திரமே நம் வசம் இருக்கிறது. கல்வான் மோதலுக்கு பிறகு இந்த இடத்தில் தான் அதிகப்படியான சீன ராணுவத்தினர் உள் நுழைந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள். இந்தியா தனது ராணுவத்தினரில் இந்த கடற்படையை சார்ந்த மார்கோஸ் வீரர்களை இங்கே களம் இறக்கியது.

சுமார் 2800 முதல் 3500 வீரர்கள் வரை திரண்டு நின்ற சீன ராணுவம் மூன்றே நாட்களில் துண்டை காணோம் துணியை என்று ஓட்டம் பிடித்து விட்டனர். இதில் பல ராணுவ அதிகாரிகள் உட்பட பலரும் இதில் அடங்குவர் என்பது தான் விஷேசமே. என்ன நடந்தது என்பது குறித்து யாரும் இன்று வரை வாய் திறக்கவில்லை.அப்போது நம் பக்கத்தில் 11 வீரர்கள் மாத்திரமே பணியில் இருந்தனர் அது தான் மார்கோஸ்.

அவர்கள் தான் மார்கோஸ்..உதாரணத்திற்கு வேண்டுமானால் ஒன்று சொல்லலாம். பனி உறைந்த அந்த ஏரியின் அடிப்பகுதியில் உள்ள நீரில் அதி வேகத்தில் நீந்தக்கூடியவர் இந்த உலகில் இவர்கள் மாத்திரமே எனும் சாதாரண குறிப்பு மட்டுமே காணக்கிடைக்கின்றன.கண்களுக்கு தெரியாத அதி நுட்பமான ராஜதந்திர வலைப்பின்னலை நம்மவர்கள் கட்டிக் அமைத்து காவல் இருக்கிறார்கள்.

Exit mobile version