கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகிறது. சீனாவின்வுகாண் நகரில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவில் இந்த கொரோனா வைரஸ் உலகில் 21ஆயிரம் பேரை காவு வாங்கிவிட்டது. இந்தியவைல் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 649 நபர்கள் பாதிக்கபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் ரயில்வே தனது பயணிகள் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரயில்வே துறை அமைச்சருடன், இந்தியன் இரயில்வே நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் காலியாக இருக்கும் இரயில் பெட்டிகளை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளாக மாற்றுவது பற்றி ஆலோசித்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தேவைப்படும் மருத்துவ வசதிகளான வென்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், உள்ளிட்ட மருத்துவ துறையில் இருக்கும் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















