கொரோனா வைரஸ் தோற்றுக்கு எதிரான இந்தியாவில் முழு ஊரடங்கு விதித்துள்ளது. இந்த நிலையில் ஏழை மக்கள் மற்றும் சாலையோரத்தில் ஆதரவற்ற மக்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை சரிபடுத்தும் நோக்கமாக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. முகாம்கள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 நேரமும் உணவுகள் வழங்கபப்ட்டு வருகிறது.
இதில் இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான இந்திய ரயில்வேயும் களமிறங்கியது. கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை சுமார் ஒரு லட்சம் ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளது .
இந்த ஏற்பாட்டில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF), அரசு ரயில்வே போலீஸ் (GRP), மண்டலங்களின் வணிகத் துறைகள், மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் IRCTC-யின் அடிப்படை சமையலறைகள் மூலம் ம உணவுப் பொட்டலங்களை ரயில்வே தொடர்ந்து வழங்கி வருகிறது .

உணவு வழங்கும் போது , சமூக தொலைவு மற்றும் சுகாதாரம் ஆகியவை மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
மார்ச் 28தேதி தொடங்கிய உணவு வழங்குதல் அன்று 2,700 மக்களுக்கும் மார்ச் 29 அன்று 11,530 மக்களுக்கும் , மார்ச் 30 அன்று 20,487 மக்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி 30,850 மக்களுக்கும், ஏப்ரல் 1 ஆம் தேதி 37,370 மக்களுக்கும் 23 இடங்களில் IRCTC தயாரித்து விநியோகித்துள்ளது.
புது தில்லி, பெங்களூர், ஹூப்ளி, மும்பை சென்ட்ரல், அகமதாபாத், பூசாவல், ஹவுரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயால் உபாதய நகர், பாலசூர், விஜயவாடா, குர்தா, கட்பாலி, திருச்சிராப்பள்ளி, குன்பாத் ஓவர் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென் மத்திய போன்ற பல்வேறு மண்டலங்களில் IRCTC இதுவரை மார்ச் 28 முதல் ஏழைகளுக்கு சுமார் 102,937 உணவுகளை விநியோகித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















