தடுப்பூசி போட்டுக் கொள்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து கொண்டிருகிறது என்பதே நிம்மதியான விசயம்தான்… தடுப்பூசி போட்டு கொள்வதை தள்ளிப்போடுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல்தான் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
மத்திய சுகாதாரத்துறை விளக்கம் இதோ…
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஐசிஎம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இது பற்றிய தரவுகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- கோவேக்சின் தடுப்பூசி இதுவரை 1.1 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4,208 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல், 17,37,178- பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் 698- (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸை 10,03,02,745- பேர் செலுத்திக்கொண்டனர்.
இதில் 17,145 (0.02%) பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸை 1, 57,32,754-பேர் செலுத்தியுள்ளனர். இவர்களில் 5,014 (0.03%) பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். யாரும் கவலைப்பட தேவையில்லை” என்றார்…