சண்டை செய்த இந்தியர்கள்… சரண்டரான மாலத்தீவு… அன்று மலேசியா இன்று மாலத்தீவு.
பிரதமர் மோடி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய சில புகைப்படங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டி படைத்துள்ளது. ஆம் ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டின் நலனுக்காக தான் பாடுபடுபவர், அதில் இந்தியாவின் தலை சிறந்த பிரதமர் மோடி அவர்கள் தான். இந்தியாவை பொருளாதார ரீதியாகவும் சரி, பாதுகாப்பு ரீதியாகவும் சரியான முறையில் பாரதத்தை வழிநடத்தி வருகிறார்.
உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 2021-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்ததது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது.
இந்த நிலையில் தான், மாலத்தீவு மீது மிகப்பெரிய பொருளாதார அட்டாக் செய்தார் மோடி சீனாவுக்கு நெருக்கமாக மாலத்தீவுகள் செல்வதை தடுக்க ,அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவே இதை உலக அரங்கில் பார்க்கிறார்கள் !!
மோடி போடும் ஒரு போட்டோவிற்கு எந்த அளவு வலிமை உள்ளது என்பதை மாலத்தீவு நன்றாகவே உணர்ந்து இருக்கிறது !!இதனால் எரிச்சல் அடைந்த சில மாலத்தீவின் அமைச்சர்கள் , தங்களின் எரிச்சலை கொட்டிய தீர்க்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார்கள்.
அது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாக போய்விட்டது !!சமீபத்தில் தங்களுடைய விடுமுறைகளை மாலத்தீவில் கொண்டாட வேண்டும் என்று ஏற்கனவே புக்கிங் செய்து வைத்திருந்த பல இந்தியர்கள், இப்போது அதனை கேன்சல் செய்ய துவங்கி விட்டார்கள் !!
நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் என்று பிரபலங்கள் தொடங்கி, பலரும் தங்களுடைய சுற்றுலா பிளான்களை மாலத்தீவில் இருந்து லட்சத்தீவுகளுக்கு திருப்பி விட்டார்கள் !! இதனால் அதிர்ச்சி அடைந்த மாலத்தீவு அரசு அந்த மூன்று மந்திரிகளையும் சஸ்பெண்ட் செய்தது. அவர்கள் பதிவிட்டது அவர்களின் சொந்த கருத்து எனவும், அது மாலத்தீவு அரசின் அதிகாரப்பூர்வமான கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மாலத்தீவுகளுக்கு மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து தான் செல்கிறார்கள் !!
இந்திய பிரதமருக்கு எதிராக ஒரு நாடு கருத்து தெரிவிக்கிறது என்றால், அந்த நாட்டை புறக்கணிப்பதற்கு இந்தியர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள் !! மோடி கையில் எடுத்திருக்கும் இந்த ராஜதந்திர முடிவுகளுக்கு நம் ஆதரவு மிக முக்கியம் !!
மலேசியாவும் இதே போன்று பேசி இந்தியாவிடம் மாட்டி கொண்டது. இந்தியாவின் 370 பிரிவு சட்டம் நீக்கப்பட்டபோது “காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்தார் உடனே பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்தது. இது மலேசியாவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.. இதனால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பு ஏற்பட்டது. மேலும் மலேசியா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
இதனால் தனது கருத்திலிருந்து பின் வாங்கியது மலேசியா மேலும் இந்தியர்கள் மலேசிய வர விசா தேவையில்லை எனவும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.