50 ஆண்டுகள் நம் நாட்டைத் தங்கள் பிடியில் வைத்திருந்தது இங்கிலாந்து.ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிக் கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் அமைச்சரவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் அதிகரித்து கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்த்துள்ளவர் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ப்ரீதி படேல் ஆவார் .
ப்ரீதி படேல் கன்சர்வேட்டிவ் கட்சியின் முதல் ஆசியப் பெண் நாடாளுமன்ற உறுப்பினராவார் ( 2010)
பிரிட்டிஷ் அரசியலில் மிகத் தீவிரமான இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு தலைவராக ப்ரீத்தி படேல் அறியப்படுபவர். இவர் உறுப்பினர் பதவி வகித்த வகித்த ‘பிரிட்டன்- இந்தியா சர்வதேச நாடாளுமன்ற விசாரணைக் குழு’வின் சமீபத்திய அறிக்கை ‘ இந்தியாவுடனான ராஜாரீக உறவை மேம்படுத்தும் முயற்சியில் பிரிட்டன் பின்னடைந்துள்ளது ‘என்று கூறியுள்ளது .
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதன் முதலாக அனுசரிக்கப்பட்ட இந்தியா தினக் கொண்டாட்டத்தின் போ து வெளியிடப்பட்ட ‘ உறவுப் பாலம் அமைத்தல்- பிரிட்டன் – இந்தியா உறவுகள்’ என்ற அறிக்கை தொடர்பாகப் பேசியபோது ‘ பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளை பிரிட்டிஷ் அரசு மறு நோக்கு செய்ய வேண்டுமென்று எங்களது அறிக்கை கூறுகிறது என்றார்
ப்ரீத்தி படேல் நமது பிரதமர் மோடியின் ஆதரவாளர் மேலும் அவரைப் பற்றி பெருமிதம் கொள்பவர் .2104 ல் மோடி அவர்கள் பிரதமாராகப் பதவி ஏற்ற போது அவரைப் பற்றிய பிபிசி யின் ஒருதலைப் பட்சமான செய்திகளுக்கெதிராக அதிகாரபூர்வமாகப் புகார் அளித்தது மட்டுமன்றி பிரிட்டனின் மேலதிகாரிகளின் கவனத்துக்கும் அதை எடுத்துச் சென்றார்.
பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சனத் தனது ஹிந்துக் கலாச்சாரத்தப் பற்றிப் பெருமிதம் கொள்பவராகவும் அதை உரக்க உலகுக்குச் சொல்பவராகவும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் திரு. நாராயண மூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையாவார் . இருந்த போதிலும் பிரதமருக்கு அடுத்தபடியாக மிகஉயரிய பதவியை இவர் அடைந்தது இவரது கடுமையான உழைப்பாலும் , அறிவாற்றலினாலுமே.
பகவத் கீதையை சாட்சியாக வைத்துத் தனது பதவிப் பிரமாணத்தை இவர் எடுக்க முடிவு செய்தபோது , பிரிட்டனில் சிலர் அதை எதிர்த்தனர். அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட போது ‘ நான் இப்போது பிரிட்டிஷ் குடிமகன்,ஆனால் எனது மதம் ஹிந்து தர்மமாகும். எனது மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்தியாவைச் சார்ந்ததாகும். . நான் ஹிந்து என்பதைப் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன் ; எனது அடையாளமும் ஹிந்துவே. ‘ என்று கூறினார்.
மோடியின் நிர்வாகத்திறனும் இந்தியர்கலின் உழைப்பும் நம்மை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆண்டு வருகிறார்கள்.