உலகத்தை அச்சுறுத்தி வரும் கே 19 கொரனோ வைரஸால் சீனா நிலைகுலைந்து கிடக்கிறது. சீனாவின் வூகான் நகரம் தனி தீவு போல் ஒதுக்கி வைக்கப்பட்ட்டிருக்கிறது.
உலகமே சீனாவின் மீது ஒரு கண் வைத்துள்ளது. இதுவரை சீனாவில் 1000 மக்கள் இறந்துள்ளார்கள்,அதுமட்டுமில்லாமல் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சீனாவில் இருக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் வூகானில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய சி 17 விமானம் வியாழக்கிழமை செல்ல உள்ளது.
இந்த விமானத்தில் சீனாவுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எத்தகைய பருவ நிலையிலும் மிகப் பெரிய அளவில் மக்களையும், தளவாடங்களையும் சுமக்க வல்லது. இந்த விமானம்.
சீனாவுக்கு பெரும் திரளாக மருந்துகளை கொண்டு செல்ல உள்ள இந்த விமானம் அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர உள்ளது. ஏற்கனவே இரண்டு தனி விமானங்கள் மூலம் வூகானில் இருந்த 640 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















