தலைவர்கள்மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கைதுசெய்யப்பட்டு குண்டாசும் போடப்பட்டது. பின் 6 மாதம் சிறையிலிருந்து வெளிவந்தார். வெளி வந்ததும் மீண்டும் சமூக வலைதளைங்களை ஆக்கிரமித்து விட்டார்.
அவர் சிறையிலிருந்து வெளிவந்ததும் முதல் சமூகவலைத்தள பதிவாக
“ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க”
என ஆரம்பித்தார் கலகத்தை.
பின் நக்கல் நையாண்டியாக எதிராளிகளை தும்சம் செய்து வருகிறார்..அவரின் பதிவுகள் அனைத்தும் தற்போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அமைந்து வருகிறது. இதனை ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடையவில்லை. மீண்டும் கிஷோர் கே சுவாமி மீது வன்மத்தை கொட்ட தொடங்கியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் சீப்பு செந்தில் என அழைக்கப்படும் ஊடகவியலாளர் வேலை பார்க்கும் மாலை முரசு தொலைக்காட்சியை ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் கிஷோர் கே சுவாமியை பற்றி அவதூறாக பேசி அந்த வீடியோ பதிவிட்டார்கள். அந்த வீடியோவை ஷேர் செய்துகதறல் பத்தல என கிஷோர் பதிவிட்டார். மேலும் மாலை முரசு தலைமை செய்தியாளர் மீது முக்கிய குற்றசாட்டை வெளிகொண்டுவந்துள்ளார் கிஷோர்.
மாலை முரசு குறித்து கிஷோர் கே சுவாமி பதிவிட்ட பதிவு :
மாலை முரசு அறம் பற்றி பேசி என்னை கேள்வி கேட்டிருப்பது சரி , அதற்கு நான் பதில் அளிக்கிறேன் , அதே சமயத்தில் மாலை முரசின் தலைமை செய்தியாளர் கணேஷ் மரியதாஸ் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு ஒன்றை பத்திரிக்கையாளர் கோட்டாவில் எடுத்து அதற்கு ஒன்றரை ஆண்டுகளாக வாடகையும் கட்டாமல் வைத்திருப்பதாக வரும் செய்தி உண்மையா ?
உண்மையெனில் , அது என்ன மாதிரி அறம் , வாடகை பாக்கியை அரசாங்கம் வசூல் செய்யாததன் காரணம் என்ன ? அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்துக் கொண்டால் சலுகைகள் என்பதாலா ?கணேஷ் மரியாதாசுக்கு சம்பளமே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற பொழுது , எதற்காக அரசாங்கத்தின் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு ? ஏழை பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் மேன்சன்களில் தங்கி கஷ்டப் படும் நிலையில் , இந்த ஊடக முதலைகளுக்கு எதற்காக சலுகைகள் ? நாங்களும் கேட்போமுல்ல
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















